நல்ல மனம் வேண்டும்

நல்ல மனம் வேண்டும்

ஒரு ஊரில் ரங்கன் , சோமு என்று இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்ததனர் . அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். ரங்கன்,சோமு இருவருக்கும் தாய், தந்தை கிடையாது . அவர்கள் திருமணம் ஆன பின்பும் ஒரே வீட்டில் இருந்து வந்ததனர்.

ரங்கனின் மனைவி பொன்னம்மாள் மிகவும் நல்லவள் , மிகவும் பொறுமைசாலி . ஆனால் சோமுவின் மனைவி ராதாவோ முன் பின் யோசிக்காமல் ரங்கனின் மனைவியுடன் காரணமில்லாமல் அடிக்கடி சண்டைக்கு செல்வாள் . ராதாவின் எண்ணம் என்னவென்றால் எப்படியாவது தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்பது தான்.

அதனால் அடிக்கடி ரங்கனின் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்தாள். ஆனால் ரங்கனின் மனைவியோ பொறுமையாக குடும்ப கௌரவத்தை முன்னிட்டு பொறுத்துக்கொண்டு வந்தாள். சோமுவின் மனைவி ராதா ஒன்றுமேயில்லாத சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குவாள். ரங்கனின் மனைவியோ பெரிய விஷயத்தை கூடபெரிதுபடுத்தாமல் நிதானமாக யோசித்து முடிவெடுப்பாள்.

சோமுவின் வயலும் ரங்கனின் வயலும் அடுத்தடுத்து பக்கத்திலேயே இருந்தது. இருவரும் விடியற்காலையில் கலப்பையை தோள்மீது சுமந்து கொண்டு எருதுகளை ஓட்டிக்கொண்டு வயலுக்கு செல்வார்கள். இருவரும் வெய்யில்,மழை என்று பாராமல் வியர்வை நிலத்தில் சிந்த மிகவும் கடினமாக உழைப்பார்கள் . மதியம் ஆனதும் அவர்கள் கட்டிக்கொண்டு வந்த கஞ்சியை பருகிவிட்டு மீண்டும் வயல்களில் கடினமாக உழைப்பார்கள் மா லையில் இருவரும் ஒன்றாகவே வீட்டிற்கு திரும்பி ச்செல்வார்கள்.
சோமுவிற்கு தன மனைவி அனாவசியமாக நிறைய வீண் செலவுகளை செய்கிறாளே என்று ஒரே கவலை . சோமு தன்னுடைய நிலத்தில் அறுவடை செய்த நெல்லை விற்ற பணத்தை வைத்திருந்தான் .

இந்த்த பணம் வீட்டில் இருந்தால் செலவாகிவிடும் என்று எண்ணினான். பாங்கில் போட்டு வைக்கலாமென்றால் இன்று ஞாயிற்றுக்கிழமை பாங்க் லீவு . நாளைக்கு காலையில்தான் பாங்க்கிற்கு சென்று பணத்தை கட்டிவிட்டு வரமுடியும்.ஆனால் இப்ப பணம் இருக்கிறது ராதா தெரிந்தது கொண்டு கேட்டு வாங்கிக்கொண்டால் என்ன செய்யறது . சரி சரி அண்ணனுக்கு நான் ஏற்கனவே தர வேண்டிய பணம் என்று சொல்லிவிடலாம் . இவ்வாறு பலவாறு சிந்தித்தவாறே கையில் வைத்திருந்த பணத்தை அவன் சட்டைப்பையில் வைக்கும் போது அவன் மனைவி ராதா பார்த்துவிட்டால் . சோமு இதை கவனித்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல என்ன ராதா பார்க்கிறே? இந்த்த பணத்தை அண்ணிகிட்டே கொடுத்துடு நான் அண்ணனுக்கு ஆயிரம் ரூபாய் தரணும் அதுதான் இது என்று சொல்லி கொடுத்து வைத்தான் சோமு.

என்ன அவசரம் பணத்தை திருப்பி கொடுக்கறதுக்கு மெதுவா கொடுத்தா தான் போகுது , மெதுவாககூட எதுக்கு கொடுக்கணும். பணத்தை அவங்க அண்ணிகிட்ட கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக பொய் சொல்லி நாம் இந்த்த பணத்தை எடுத்துக்க வேண்டியதுதான் என்று ராதா பலவாறு யோசித்தாள்.

ராதா தன்னுடைய பீரோவில் தான் வைத்திருக்கும் நகைகளுடன் அவள் கணவன் கொடுத்த பணத்தையும் சேர்த்து ஒன்றாக போட்டு வைத்தாள்.

அன்று இரவு திருடன் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த நகைகள்,பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துக்கொண்டு போய் விட்டான்,

மறுநாள் பொழுது புலர்ந்தது. சூரியன் தன்னுடைய பொன்னிறமான ஒளிக்கதிர்களை வீசிக்கொண்டிருந்தது. ராதா காலையில் எழுந்ததும் பீரோ திறந்து துணிமணிகள் மற்றும் பொருட்கள் மூலைக்கு ஒன்றாக இரைந்து கிடப்பதையும் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கதறி அழுதாள்.

அவர்கள் வீட்டில் இருந்த அனைவரும் என்ன? என்ன? என்று மிகவும் பயந்து அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தது விசாரித்தார்கள்.

ராதா நடந்தது அனைத்தையும்எல்லோரிடமும் சொல்லி , நான் பொய் சொல்லாமல் நல்லது நினைச்சிருந்தா நல்லது நடந்திருக்கும் என்று சொல்லி அழுதாள்.

அதற்கு சோமு ," நன் அண்ணணுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்கணும் என்று நான் சொல்லிக்கொடுத்தது நீ ஊதாரித்தனமாக பணத்தை அனாவசியமாக செலவு செய்வேன்னு சும்மா அப்படி சொன்னேன். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தததால் இன்று பாங்கிற்கு சென்று பணத்தை கட்டலாம் என்று இருந்தேன். கடைசியிலே திருடன் எல்லாத்தையும் கொள்ளை அடித்துக்கொண்டு சென்றுவிட்டான் என்று மிகவும் கவலையுடன் மனைவியிடம் கூறினான்.

நான் தனிக்குடித்தனம் போகணும் என்கிற காரணத்திற்காக அண்ணியிடம் பணத்தை கொடுக்காமலே பணத்தை கொடுத்துவிட்டதாக பொய் சொல்லி அண்ணி மேலே அபாண்டமா பழி போடலாம் என்று நான் நினைத்தேன். அதுக்கு தகுந்த தண்டனையை கடவுள் கொடுத்துவிட்டார் என்று மனம் வருந்தி ராதா அழுதாள். மேலும் என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் என்று சோமுவிடம் கெஞ்சினாள் ராதா.

அதற்கு சோமு , " என்கிட்டே நீ ஈன மன்னிப்பு கேட்கிறே முதல்லே அண்ணன் ,அண்ணிகிட்ட மன்னிப்பு கேளு என்றான். ராதாவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். அண்ணன்,அண்ணியும் தெரியாம தானேம்மா தப்பு செய்த இப்பொழுது தான் நீ திருந்தி விட்டாய் அதுவே போதும் நாங்களும் மன்னித்துவிட்டோம் என்றனர்.

ஆக்கம் வெங்கட்

எழுதியவர் : வெங்கட் (7-Nov-20, 9:09 pm)
சேர்த்தது : வெங்கட்
Tanglish : nalla manam vENtum
பார்வை : 332

மேலே