நிவர் புயலுக்கு நன்றி

அடைபட்டப் புலியாய்
ஆக்ரோஷத்துடன் உறுமி
அதிவலிது இயற்கையின் சீற்றமென
அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது
கரை கடந்தாலும்
காட்டம் குறையா நிவர் புயல்.....

தலைவிரித்தாடிய விருட்சங்கள்
தடுமாறி தளர்ந்து வேரொடு சாய்ந்தன...
பள்ளங்கள் நிறைந்து
வெள்ளம் குடிபுகுந்தன..
சினந்து பனையாய் உயர்ந்த அலைகள்
சிதைத்து படகுகளை சீரழித்தன..

ஏரிகள் நிறைந்ததால் நிர்பந்தமாய் மதகுகள் திறப்பு..
அவ்வப்போது சிறு சிறு மின்வெட்டு...

அரசதின் துரித நடவடிக்கையால்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் உயிர்ச்சேதம் இருப்பினும்
அனைத்து மக்களும் அச்சமின்றி மீண்டனர்...

தொடரும் காற்றும் மழையுமென
எச்சரிக்கிறது வானிலை அறிக்கை...
பாதுகாப்பாய் இல்லம் தங்குவோம்
அவசியம் இல்லா பயணங்கள் தவிர்ப்போம்...
அவசியம் இருப்போர்க்கு உதவிக்கரம் நீட்டுவோம்....

மழை தந்த நிவர் புயலுக்கு நன்றி
தாமதமின்றி நிவாரணப் பணிகள் மேற்கொண்ட
தமிழக அரசுக்கும் நன்றி நன்றி!

எழுதியவர் : வை.அமுதா (30-Nov-20, 7:10 pm)
பார்வை : 80

மேலே