நாயிக்கு வேலையில்லை

நாயண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர்
தேடியே தினம் தின்று தமது உடற்காப்பவர்
இருக்கும் இடந்தோறும் எல்லையை அமைப்பவர்
வருவோர் போவோரை பயங்காட்டி நிற்பவர்
வெட்ட வெளியில் விட்டையால் அலங்கரிப்பார்
திடுமென தலையைத் தூக்கி மிரட்சிக்காட்டுவார்
தடதடவென ஓடி தாறுமாறாய் குரைப்பார் சத்தமாய்
யுத்தம் நடப்பதைப் போல் அண்டை நாயார் வந்தால்
ஆர்ப்பாட்டமான குரலால் நமக்குள் கிலியூட்டுவார்
பெண் நாயோடு பெரும் படையே அணிவகுந்து ஓடும்
நாயக்காள் உண்ண நேரமின்றி ஓடி கொண்டே
அவர்களால் எந்தவொரு நன்மையும் நமக்கில்லை
அண்டிப் பிழைத்தே நமக்கு அன்பைக் காட்டியவாறு
அவசரமாய் போகும் போது அடிக்கடி குறுக்காய் வந்து
அவர்களால் புரண்டு விழுந்து அடிப்பட்டு நாம்
அரை நொடியிலே அவர்கள் திடமாய் எப்பாதிப்பின்றி
எந்த வேலையும் இல்லை அவர்களுக்கு என்றாலும்
எந்நேரமும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே
நாயிக்கு வேலையில்லை நிற்க நேரமில்லை.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Dec-20, 11:18 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 64

மேலே