இனிய புதுவருடம் பிறந்ததுவே

இனிய புதுவருடம் பிறந்ததுவே

பழைய நிகழ்வுகளும் நினைவுகள் யாவும்
ஆதவனை கண்ட பனிபோல் விலகிட
புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும்
புன்னகையுடன் எதிரில் கண்முன் தோன்றிட
பெறுவாழ்வின் பயணமும் புதுநெல்லின் மணமும்
என்றென்றும் நிலைக்க வேண்டுமென மனம் கூவிட
மகிழ்ச்சியும் ஆரவாரமும் மிதமாக ஏந்திக் கொண்டு
நள்ளிரவில் ஒளி தீபங்களும் வான வேடிக்கைகளும்
இரவை பகலாக்கி எத்திக்கும் அழகாக ஒலித்திட
நண்பர்கள் கூடி விருந்தும் பரிசும் மாற்றிமகிழ்ந்திட
உறவுகளுடன் உல்லாசமாக களித்து கொண்டாடும்
இனிய புதுவருடம் பிறந்ததுவே

எழுதியவர் : கே என் ராம் (31-Dec-20, 9:06 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 177

மேலே