நிலவுப்பெண்ணே

நிலவுப்பெண்ணே
_____________________________ருத்ரா.


உன் கைப்பையில் இருந்து
அந்த அழகிய சிறு கண்ணாடியில்
அடிக்கடி உன் முகம் பார்த்துக்கொள்கிறாய்.
அப்புறம் அதை உள்ளே
போட்டுக்கொள்கிறாய்.
அப்படித்தான் அந்த நிலவை
சிறை வைத்துக்கொள்கிறாய்.
அதனால் பார்.
இன்று இந்த பௌர்ணமியும்
அமாவாசை ஆகி விட்டது.
_________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (29-Jan-21, 9:41 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 439

மேலே