சுவற்றில் பல்லி

இரவுநேரம் புதிதாய் வெள்ளை அடித்த
;வரவு' அறையின் சுவரில் ஒரு
பல்லி வேகமாய் சென்று விளக்கை
சுற்றி இருந்த பூச்சி ஒன்றைக்
தன வாயால் கவ்விக்கொண்டு மெல்ல
விழுங்க ...... ஒரு ' மினிஸ்க்கூல் ' முதலைபோல்...
அதைப் பார்த்த நான் ' இம்ம்.... இப்படியும்
ஒரு இறைவன் படைப்பா என்று அங்கலாய்க்க...
அதைக் கேட்டது போலவே பூச்சியை விழுங்கிய
'சுவத்துப் பல்லி''' கிச் கிச் என்று கத்தியது.
'என்னை இப்படி விவரிக்கும் 'நீயும்
ஒரு இறைவனின் படைப்புதான் என்று
கூறுவது போல இருந்தது ......
பல்லிக்கு கேட்கும் திறன் உண்டு என்று
நம்பும் ஜோதிடம் நினைவுக்கு வந்தது!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Feb-21, 2:07 pm)
பார்வை : 72

மேலே