தலைவரே என்னைக் காப்பாத்துங்க
கட்சித் தலைவர்: தர்மராஜீ, யாருய்யா நம்ம அலுவலகத்தின் முன்னாடி ரகளை பண்ணீட்டு இருக்கிறது
#########
அய்யா அவரு வடஇந்தியக்காரர் போல தெரியுது. இந்தியும் தமிழும் கலந்து பேசராறு. உங்களப் பார்க்க அனுமதி கேட்டு ரகளை பண்ணறாரு.
#########
வரச்சொல்லுயா.
##########
சரிங்க ஐயா.
############
(உள்ளே வரும் நபர்): நமஸ்தே நேதாஜி.
#########
நமஸ்தே. வணக்கம்.
########
யாரப்பா நீ.
#######
ஐயாஜி, நான் தமிழ்நாட்டுக்காரன் தான். ரத்தம் சிந்தாத ரவுடி. இங்க பல குற்றச் செயல்களைப் புரிஞ்சிட்டு வடநாட்டுக்குத் தப்பிப் போயி அங்கேயே ஒரு நகரத்தில தங்கிட்டேன். ஒரு இந்திக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணீட்டேன். ரண்டு கொழந்தைங்க. என்னுடடைய புகைப்படமும் பேரும் தெரியாதபடி குற்றச்செயல்கள்ல ஈடுபட்டேனுங்க. அப்பறம் தப்பிச்சுப் போனேன். அங்கயும் இரவு நேரத்தில் வழிப்போக்கர்களை மிரட்டி பணம் நகைகளைப் பறிச்சிட்டு இருந்தேன். பல தடவை ஜெயிலுக்கு போனேனுங்க. என்னைப் பத்தி இந்திப் பேப்பர்ல வெளியான பல செய்திகளை கத்திரிச்சு எடுத்து வந்திருக்கேன். பாருங்கள். (மேசை மீது அந்த நபர் ஒரு கத்தை செய்தித்தாள் துண்டுகளைப் போடுகிறார்.
########
அச்சா. பலே, பலே. உன்னை மாதிரி ஆளுங்கதாய்யா எங்க கட்சிக்கு வேணும்.
சரி உம் பேரைச் சொல்லு.
########
மேரா நாம் அல்கா சிங். என்னோட ஒரிஜனல் பேரு அங்கமுத்து..வடக்க போயி அல்கா சிங் ஆகிட்டேனுங்க.
#########
சரி. சரி அல்கா சிங்கு இந்த கட்சி உறுப்பினர் விண்ப்பத்தில உன் பேரு, பிறந்த தேதி எழுதி கையெழுத்து போடு. உனக்கு ஒரு வீடு தயாரா இருக்கு. நீயும் உன் குடும்பமும் அந்த வீட்டில தங்கிக்குங்க.
#########
இந்தாங்கய்யா எங்க ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைங்க.
#########
அதையெல்லாம் நாங்க பாத்து முகவரியை மாத்தி எல்லாம் புதுசா வாங்கித் தர்றோம். நீ பிரச்சாரத்துக்குப் போயி இந்தியும் தமிழும் கலந்து பேசு. பிரச்சாரத்துக்கு வேண்டிய விஷயம் இந்த சின்ன கையேட்டில இருக்குது. தர்மாராஜ் அல்கா சிங்குக்கு பத்தாயிரம் குடுத்து அந்த வீட்டைக் காட்டி எறக்கி விட்டுட்டு வா.
########
(அவர்கள் போனபின்பு தலைவர) : ,ராஜ்குமார், நாளைக்கு இந்தச் செய்தி எல்லாப் பேப்பர்லயும் வர்ற ஏற்பாட்டைச் செய். தலைப்பு மட்டும். ....... 'கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த இந்திக்கார இளைஞர் அல்கா சிங்'
#######
சரிங்க ஐயா.