கோடீஸ்வரன்
துபாயிலிருந்து வந்த கண்ணுச்சாமி தன் நண்பன் பொன்னையனை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான்.
◆◆◆◆◆◆
வாடா கண்ணுச்சாமி, நல்லா இருக்கிறயா?
#@@@@@
நல்லா இருக்கிறன்டா.
@@@@@@@
என்ன, வெளிநாட்டுக் கார் எல்லாம் வச்சிருக்கிற? ரவுடித் தொழில விட்டுட்டயா?
@@@@@@
கற்றத மறக்கற கருங்காலி இல்லடா நான். தேவைப்பட்டால் ரவுடித்தனம். மற்றபடி வருசத்துக்கு ஒரு கோடி சம்பாதிக்கும் தொழில் அதிபர்டா நான்.
@@@@@|@@
என்ன தொழில்டா செய்யற?
############
கூட்டம் சேர்க்க முடியாத கட்சிகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கிறதுதான்டா என் வேலை..ஒரு ஆளுக்கு எட்டு நூறு ரூபாய் தருவுங்க. அதில ஐநூறு ரூபாய் எனக்கு. கூட்டத்தில் கலந்து கைதட்டி, விசிலடிச்சு, கூட்டம் நடத்தும் கட்சிப் பேரையும் தலைவர்கள் பேருங்களயும் கட்சிப் பேரையும் சொல்லும் போது 'வாழ்க, வாழ்க'னு விண்ணைப் பிளக்கும்படி சத்தமா கத்தற நான் அனுப்பற.ஆட்களுக்கு.. தலைவர் இந்திக்காரரா இருந்தால் "சிந்தாபாத், சிந்தபாத்" என்று கத்த வேண்டும். அவுங்களுக்கு பிரியாணி பொட்டலம் தண்ணீர் பாட்டிலோட இருநூறு ரூபாய் கூலி..
#######
அப்பறம்?
##############
மாற்றுக் காட்சி கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் ரவுடித்தனம் செய்து கூட்டத்தைச் சிதறி ஓடச்செய்ய என் கைவசம் என்னிடம் பயிற்சி பெற்ற ஐம்பது ரவுடிகள் இருக்கிறாங்க. அந்த வேலைக்கு ஒரு ரவுடியை அனுப்ப அழைப்பு அனுப்பிய கட்சி இரண்டாயிரம் ரூபாய் தரும். ரவுடிகள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கால் பாட்டில் மது, ஒரு பிரியாணிப் பொட்டலம் கையில ஐநூறு ரூபாய். இப்பிடி என் வருமானம் கூடிட்டே போகுது..
@@@@|@@@@@@@|
பரவால்லடா நீ இருந்த இடத்தில் இருந்திட்டே நீ கோடீஸ்வரன் ஆயிட்ட. நான் குடும்பத்த இங்க விட்டுட்டு துபாயில கஷ்டப்படறேன். எனக்கு வாழ ஒரு வழி காட்டுடடா.
##########
சரி. உனக்கும் ரவுடித்தனம் பண்ணின அனுபவம் இருக்குது. ஒரு கட்சில ரவுடிங்களுக்கு முன்னுரிமை குடுத்து அந்தக் கட்சில பதவியும் மாதச் சம்பளமும் குடுத்து சேத்துக்கிறாங்க. அங்க போயி எம் பேரைச் சொல்லு. உன்னை உடனே அந்தக் கட்சில சேத்துக்குவாங்க..
@@@@@@@@@
நன்றி நண்படா. சாயந்திரம் வந்து அடையாள அட்டையைக் காட்டி உங்கிட்ட ஆசி வாங்கிக்கிறன்டா..