நிழல்

நிழல்(திரைக்கதை வடிவில்)

கார்மேகம் சூழ,
மழை பொழிய
காத்திருந்த தருணம்

மலைப்பாதையின் நடுவே
மிதமான வேகத்தில்
கார் ஒன்று சென்று கொண்டுஇருக்கிறது

அந்த காருக்குள்
ஒரு கர்ப்பிணி பெண்ணும்
அவளது கணவனும் உள்ளார்கள்

இருவரும் மனம்விட்டு
பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

உரையாடல்
நடந்துகொண்டு
இருந்த தருவாயில்
கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை
மீறி விபத்துக்குள்ளாகிறது

விபத்தில் கணவன் இறக்க,
அவளோ உயிருக்கு போராடி கொண்டு இருக்க...

அவளின் அரை மயக்க
மங்களான பார்வையில்...

ஒரு கை அவளுக்கு உதவுகிறது!

(இடியுடன் பலத்த சத்தம் மழையுடன்)

முழு சுய நினைவை அவள் இழக்க

(அம்புலன்ஸ் சைரன் சத்தம் பின்னனியில் ஒழிக்க)

மருத்துவமனைக்கு
கொண்டு செல்லபடுகிறாள்,

தீவிர சிகிச்சை பிரிவில்
சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது,

(ஹாஸ்பிடல் ATMOSPHERE)

சிகிச்சை மேற்கொண்டு
இருக்கும் தருவாயில்,

(குழந்தை அழுகும் சத்தம்)

அவளுக்கு,
ஆண் குழந்தை பிறக்கிறது...

குழந்தை பிறந்த பிறகு
செவிலியர்கள் அவளிடம்,

"விபத்தில் உன் கணவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்"

"உனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது"

என்று செவிலியர்கள் அவளிடம் தெரிவிக்கின்றனர்...

அவள்
தன் கணவனை
நினைத்து வருந்துகிறாள்...

(அப்போது அவள் நினைவில்)

ஏதோ
ஒன்று அவள் நினைவை (உதவிய அந்த கை)
வருடிக்கொண்டு இருக்கிறது!


கண்களில்
நீர் தேக்கங்களுடன்
நாட்கள் ஓடுகிறது...

மாதங்களும் ஓடுகிறது,
குழந்தையும் வளர ஆரம்பிக்கிறது,

அவளும் கொஞ்சம் கொஞ்சமாக
மனம் தேறுகிறாள்,

ஒரு நாள் இரவு,
அவள் தன் வீட்டு வேளைகளையெல்லாம்
முடித்துவிட்டு தன் குழந்தைக்கு உணவூட்ட
குழந்தையிடம் வரும்போது

குழந்தையின் அருகே கதவோரமாய்...

(ஒரு நிழல்)

அதிர்ச்சியில் அவள் உறைந்து நிற்க!

(நிழல் சட்டென்று மறைய)

பயந்த அவள் குழந்தையை
தூக்கி கொண்டு
வேறு அறைக்கு
ஓடிச்சென்று கதவடைக்கிறாள்

(கதவு அடைக்கும் சத்தம்)

தன் குழந்தையை
கட்டி அணைத்தபடி
அறையின் ஒரு ஓரமாய் அவள்,

(இதய துடிப்பு குதிரை வேகத்தில்)

அச்சத்துடன் இரவு கழிய...

இருள் நீங்கி,
ஒளி பிறந்திட,
அச்சம் மட்டும்
நிரந்தரமாக குடியேறுகிறது அவ்வீட்டில்...

நேற்று இரவு நடந்த
சம்பவத்தை நினைத்து
அஞ்சுகிறாள்!

செய்வதறியாமல் திகைக்கிறாள்,

தன் குழந்தைக்கு
ஏதேனும் ஆபத்து
நேரிடுமோ என்று,

யார் அது? யார் அது?
என மனத்தினுள்ளே
குமுறிக்கிறாள்...

அப்போது மறுபடியும்
அவள் நினைவில்!

(அவளுக்கு உதவிய அந்த கை)

நினைவுக்கு வருகிறது!

குழம்புகிறாள்,
ஏதோ வினோதமாக
நடப்பது போல் உணருகிறாள்!

அக்கணமே,
விபத்து நடந்த இடத்திற்கு
விரைகிறாள்...

(தன் குழந்தையுடன்)

இரு பக்கமும் மலைப்பாதை
நடுவே அவளும் அவள் குழந்தையும்...

எதும் விளங்கவில்லை!

ஆனால் ஏதோ
ஒன்று அவளை
உறுதிக்கொண்டே இருக்கிறது

குழப்பங்குளுடன் நகர்கிறாள் ...

மாலை மங்கும் நேரம்
இருள் சூழ காத்திருந்த தருணம்

மீண்டும் அதே இரவு,

(இம்முறை மழையுடன்)

(மழையின் காரணமாக
அப்பகுதியில் மின் இணைப்பு
துண்டிக்கபட்டுள்ளது)

(விளக்கு வெளிச்சத்தின் வட்டத்தில்)

குழந்தையின் அருகே
பயத்தின் விளிம்பில் அவள்,


நிசப்தமான அமைதி
வெகு நேரமாகியும் எவ்வித
அசைவுகளும், சப்தங்களும் இல்லை...

திடிரென்று மேலே
உள்ள அறையில் கண்ணாடி
உடையும் சப்தம்...

(பதறுகிறாள்...)

குழந்தையை தொட்டிலில்
கிடத்தி விட்டு மேலே ஓடுகிறாள்...

(கையில் ஒளி ஏந்தியபடி)

பயமும், பதற்றமும் அதிகரிக்க...

அந்த அறைக்குள் செல்கிறாள்...

கை நடுங்க விளக்கை
பிடித்தபடி உள்ளே அவள்,

அவள்,
அவள் நிழல் மட்டும்
அங்கு இல்லை என உணருகிறாள்...

உணர்ந்த தருணம்...

வெளிச்சம் அணைகிறது,


(தொடரும்...)

(விரைவில் அடுத்த பகுதி...)

எழுதியவர் : திவாகர் (15-Feb-21, 11:57 pm)
சேர்த்தது : divakar
Tanglish : nizhal
பார்வை : 557

மேலே