காலா என்ற கண்மணி

ரஜினிகாந்துக்காக
கரிகால் பெருவளத்தான்
'காலா' ஆக்கப்பட்டான்.

சிற்றூர் ஒன்றில்
பெண்மணி ஒருவர்காலா, '
காலா' என்று
பலமுறை கூப்பிட்டார்.

சிறுவன் ஒருவன்
ஓடி வருவானென்று
எதிர்பார்த்து காத்திருந்தேன்.

சில நொடிகளில்
ஓடி வந்தாள்
அழகான சிறுமி ஒருத்தி.

சிறுமியின் தாயும் தந்தையும்
ரஜினியின் ரஜிகர்கள் என்பதை
திண்ணைச் சுவற்றுப் படம்
பறை சாற்றியது!

இந்திப் பெயர்களைப்
பெற்ற பிள்ளைகளுக்குச்
சூட்டுவதே
தற்காலத் தமிழிரின் நாகரிகம்.

இந்தியில் 'காலா' என்ற
பெயர் உள்ளதா என்று
தேடிப்பார்த்தேன்
பெயராய்வில் ஆர்வம்
உள்ளவன் நானென்பதால்.

'காலா' என்றால் 'கண்மணி'
என்று பொருள்.
நம் 'காலா'வின் பெயருக்கான
பொருள் பற்றித் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.

தரணியெங்கும் வாழும்
கற்ற தமிழர்களில் பெரும்பாலோரே
பெற்ற பிள்ளைகளுக்கு
இந்திப் பெயர்களையும்
பொருளற்ற பெயர்களையும்
சூட்டி மகிழும் காலத்தில்

நம்மால் 'காலா'வின்
சிற்றூர்ப் பெற்றோரை
குறை சொல்ல முடியாது.

தமிழை வளர்க்கும்
பணியில் உள்ள
பெற்றோரில் பலரும்
தாம் பெற்ற பிள்ளைகளுக்கு
பிறமொழிப் பெயர்களைச் சூட்டி
ஆனந்தக் கூத்தாடுகிறார்.

தமிழே உலகின்
'முதன் மொழி'' என்றுரைக்கும்
கல்வெட்டுச் சான்றுகளை
அறியாதவரா கற்ற தமிழர்களில்
பெரும்பாலோர்?

தமிழ் உணர்வு இல்லாத
கற்றவர்க்கும் கல்வியறிவில்லாத
மற்றவர்க்கும் இன்றில்லை
வேறுபாடு பிறமொழிப்
பெயர்களைச் சூட்டும்
பேரார்வத்தில்!

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Kaala - Pupil of the eye, Durga
இன்டியாசைட்நேம்ஸ்காம்

எழுதியவர் : பெயராய்வு (15-Feb-21, 7:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 107

மேலே