உண்மை காதலுக்கு பரிசு ஏமாற்றம்

மழை பலமாக வருகிறது கல்லூரிக்கு எப்படி செல்வது என்று யோசித்து கொண்டே மிதிவண்டியை வேகமாக மிதித்து கொண்டு சென்றால் மணிமேகலை. இன்னும் நான்கு கிலோமீட்டர் இருக்கிறது. நம் உடை வேறு முழுவதும் நினைந்து விட்டது. மழைச்சாரல் நம் கண்களுக்கு நேராக அடிக்கிறது. எப்போது தான் இந்த மழை நிற்க போகிறது தெரியவில்லை. மணிமேகலை நினைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் அவள் மிதிவண்டி வேறு அந்த நேரம் பார்த்து பிரேக் பிடிக்காமல் எதிரில் வரும் கல்லூரி பேருந்தை மோதும் நோக்கில் சென்றது. உடனே !அந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டு மணிமேகலையை பார்த்து ஏம்மா !பார்த்து வரமாட்டியா !என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். ஆனால், மணிமேகலை காதில் அந்த ஓட்டுநர் திட்டியது கூட விழவில்லை. அவள் நினைவு முழுவதும் இன்று "நம் கல்லூரிக்கு செல்வோமோ  இல்லை கல்லூரி பேருந்து நம்மை விட்டு செல்லுமா " என்ற எண்ணத்தில் முன்பை விட மிதிவண்டியை வேகமாக மிதித்து கொண்டு சென்றாள். எப்படியோ அவள் போய் மிதிவண்டியை நிறுத்துவதற்கும் அவள் கல்லூரி பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. பேருந்து நின்றவுடனே மணிமேகலை பேருந்தில் போய் ஏறினாள். பேருந்தில் எறியவுடனே, அவள் பேருந்து ஓட்டுநர் "என்ன மணி செம மழை போல "என்றார். அதற்கு மணிமேகலை ஆமாம் !அண்ணா செம மழை என்ன பண்றது. என் உடை முழுவதும் நனைந்து விட்டது என்றாள். மணிமேகலை அமர்வதற்கு இடமில்லாத படியால் பேருந்து படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டே சென்றாள். மணிமேகலை தனியார் கல்லூரியில் படிக்கிறாள். பேருந்து கல்லூரியை சென்று அடைந்தது. பேருந்திலிருந்து இறங்கி மணிமேகலை  வகுப்பறைக்கு  சென்றாள். மணிமேகலை என்றும் இல்லாத மகிழ்ச்சி அன்று தான் அவள் முகத்தில் தெரிந்தது. மணிமேகலை லேசான மாநிறம், ஐந்து அடி உயரம் மற்றும் நீண்ட கூந்தலும் உடையவள். மணிமேகலை ஆங்கிலத்துறை அன்று பார்த்து அவளுக்கு பாடம் எடுக்கும் படி அவளது ஆசிரியர் சொல்லி இருந்தார். நேரம் போக போக அவளுக்கு பயம் வந்து பற்றிக்கொண்டது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் அதற்குள்ள இந்த பாடத்தை படித்து பாடம் நடத்திவிடலாம் என்ற தைரியத்தில் அவளும் படித்து பாடமும் நடத்தி முடித்துவிட்டாள். இது அவளது மூன்றாவது வருடம் என்பதால் எல்லாம் ஆசிரியரும் அவர்களது நேரத்தில் வந்து பாடத்தை நடத்திவிட்டு சென்றனர். மணிமேகலை வாழ்க்கையில் அவளது பெற்றோர்க்கோ முதலிடம் அளித்தால் அவள். கல்லூரி முடிவதற்கு இன்னும் ஆறு மாதம் தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் அவளது மனதில் பல மாற்றங்கள் உருவானது. என்றும் போல் கல்லூரிக்கு சென்று இருந்தாள். மணிமேகலை ஆண் நண்பர்களிடம் பேசுவதற்கு முதலில் தயங்கினாள். ஆனால், போக, போக அவர்கள் மீது நண்பன் எனும் முத்திரையை பதித்தாள். மணிமேகலை நன்றாக படிக்க கூடியவள். அதனால், அலகுத்தேர்வு, பருவத்தேர்விலும் நன்மதிப்பெண்ணும் பெற்று இருந்தாள். மணிமேகலை படிக்கும் அதே ஆங்கிலத்துறையில் தான் அவனும் படிக்கிறான். ஆனால், இவளை விட அவன் ஒரு வயது இளையவன். அவனோ மாநிறம், நல்ல உயரம் மற்றும் நன்கு படிக்க கூடியவன். மணிமேகலை தோழி ஒருத்தி மணிமேகலையிடம் வந்து உன் துறையின் ஜூனியர் மாணவனை பார்த்தேன் எங்கள் ஊரின் அருகில் என்றாள். ஒருவாரம் கழித்து மணிமேகலைக்கு இந்த நினைவு வரவே அவளது மனம் அது யாராக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றிருந்தாள் மணிமேகலை. மணிமேகலைக்கு அவனை பற்றி தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருந்தாள். கல்லூரி இடைவெளி நேரத்தில் வெளியில் செல்லலாம் என்று அவள் தோழிகளுடன் சென்று கொண்டிருந்தாள். அவளது வகுப்பறை இருப்பது மூன்றாவது மாடியில்.மணிமேகலையும் அவள் தோழிகளும் படிக்கட்டுகளில் இறங்கினர்.  அப்போது தான் அந்த மின்னலின் வேகம் இரு பார்வைகளுக்கிடையில் அசைவற்று சிலையாகி போனால் மணிமேகலை. அவளுக்கு எதிரே இருக்கும்  வேலனின் கண்களை ஊடுருவி சென்று அவன் மனதில் தங்கிவிட்டாள். மணிமேகலை சுயநினைவு வந்து எதிரே நிற்கும் வேலனை பார்த்தால் முன்ஜென்மத்தில் வாழ்ந்த மயக்கம் அவள் உள்ளத்தில். உடனே !மணிமேகலைக்கு அவள் தோழி சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே, வேலனிடம் சென்று, வேலா நீ !ஒருவராத்திற்கு முன் காஞ்சிபுரம் சென்று இருந்தாயா என கேட்டால். உடனே, வேலன் நான் எங்கும் செல்லவில்லையே என்றான். இதை கேட்ட மணிமேகலை, ஐயோ !மன்னிச்சுடுங்க... என் தோழி உங்களை பார்த்ததாக சொன்னாள். அதனால் தான் கேட்டேன் வேறு எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். வேலன் தினமும் மிதிவண்டியை தான் கல்லூரிக்கு எடுத்து வருவான். மணிமேகலைக்கு அவன் கண்களை பார்த்தத்திலிருந்து உள்ளுக்குள் அவனது நினைவு தவிர வேறு எந்த நினைவும் வருவதில்லை. கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு மிதிவண்டியை பார்த்தால், வேலனின் நினைவு. மணிமேகலை !இதை என்னவென்று சொல்வது முன்பின் தெரியாத ஒருத்தன் இதுவரை நாம் அவனிடம் பேசியதில்லை ஆனால், ஒருமுறை தான் அவன் முகத்தை பார்த்தோம். நம் உள்ளம் முழுதும் அவன் நினைவுவே இருக்கிறதே. இது என்ன விந்தை ! என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டால். மணிமேகலைக்கு காதல் என்னவென்று தெரியாது !அவளது
தோழிகள் காதலிக்கிறேன் என்று சொன்னாலும் அவர்களை பார்த்து காதல் எப்படி வரும் என்று எதிர் கேள்வி கேட்பவள். ஆனால் !இன்று எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. இரவு எட்டு மணி இருக்கும் மணிமேகலை சாப்பிட்டு விட்டு தட்டு கழுவுவதற்காக வெளியில் வந்து தட்டு கழுவி விட்டு வானத்தை நிமிர்ந்து பார்த்தால் வட்ட வெண்ணிலாவு தெரியவில்லை. அந்த நிலவில் அவள் உள்ளத்தை கொள்ளைககொண்ட அந்த வேலனின் முகமே தெரிந்தது மணிமேகலைக்கு. மணிமேகலைக்கு என்றும் இல்லாத சிலிர்ப்பு என்ன இது !எல்லாம் கற்பனையாக இருக்கும் என்று அன்று இரவு தூங்கிவிட்டாள். மறுநாள் மணிமேகலை எப்போதும் போல் கல்லூரிக்கு சென்றாள். வேலன் மணிமேகலையை பார்த்தான் ஆனால் !அவர்கள் பேசவில்லை !ஆனாலும் கண்கள் மட்டும்  தங்களின் காதலினை பரிமாறி கொண்டது. மணிமேகலையின் எண்ணம் கண்களால் வருவது காதல், மனதால் ஒற்றிணைவது காதல், சாதியை மறந்து சமத்துவத்தை ஏற்படுத்துவது காதல் மற்றும் யார் என்று தெரியாமல் ஒருவனை உள்ளத்தால் நேசிப்பது தான் காதல் என்று மணிமேகலை அன்று தான் புரிந்து கொண்டால். மணிமேகலை வேலனிடம் பேச ஆரம்பித்தாள். நட்பாக இருந்த அவர்களின் நட்பு நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியது. பிறகு இருவரும் கைபேசியில் பேசிகொள்வதுமாக இருந்து வந்தனர். ஆனாலும், இதுவரை மணிமேகலை அவளின் காதலை வேலனிடம் சொல்லவில்லை அதே போல், வேலன் மணிமேகலையை காதலித்தும் அவன் தன் காதலை மணிமேகலையிடம் சொல்லவில்லை. மணிமேகலை தன் காதலை சொல்லலாம் என்று நினைத்தால் அவளின் பெற்றோர் நினைவு வந்து அவளை தடுக்கிறது. இப்படியுமாக மூன்று மாதம் கடந்த நிலையில் திடீரென்று, ஒருநாள் மணிமேகலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது அவளின் உண்மை காதல் அன்று கனவாகவே மாறிப்போனது. "மணிமேகலையின் தோழியை காதலிப்பதாக மணிமேகலையின் தோழியிடம் தன்னுடைய காதலை தெரிவிக்கிறான் வேலன் " அந்த காதல் மணிமேகலைக்கு தெரிந்து விடுகிறது. மணிமேகலையின் நெஞ்சில் ஈட்டியை வைத்து குத்துவது போல் இருக்கிறது. மணிமேகலை தன் தோழிக்காக தன் காதலை விட்டு கொடுக்கிறாள். தன் தோழியிடம் உண்மையை சொல்லலாம் என நினைத்தால் அவளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும் என்று மனம் குமுறி இரவு முழுவதும் தூக்கம் வராமல் அழுது கொண்டிருந்தாள். மறுநாள் எப்போதும் போல் கல்லூரிக்கு செல்ல நினைக்கிறாள். ஆனாலும், அவள் முகம் முன்பை போல் மலரவில்லை, கண்கள் சிவந்து கன்னம் வீங்கிருக்கிறது. அவளின் அம்மா கேட்டதுக்கும் ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டு மிதிவண்டியை எடுத்து கொண்டு மிதித்து கொண்டு வேகமாக சென்றாள். அன்று, அவளது கல்லூரியில் இறுதியாண்டு விழா நடந்து கொண்டிருந்தது. அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தபோதிலும் அவளோ வாழ்க்கையே இத்தோடு முடிந்து விட்டது என்று எண்ணினாள். மணிமேகலை தன்னை பற்றிய கருத்தை எழுதி தரும் படி கேட்கிறாள். அதற்கு, வேலனும் எழுதி தருகிறேன் என்று அவளை பற்றி நல்ல விதமாக எழுதிய அவன் கடைசியில் "உனக்கும் எனக்கும் உள்ள உறவு முறை அக்கா தம்பி என்ற உறவு முறை மட்டுமே"வேறு எதுவுமில்லை என்று எழுதியிருப்பதை பார்த்த மணிமேகலையின் இதயம் அந்த நிமிடமே சுக்குநூறாக நொறுங்கி விட்டது. அந்த கள்வனின் மனதை இப்போது முழுமையாக அறிந்துவிட்டாள் மணிமேகலை. ஆனால், வேலன் எழுதிய "அக்கா தம்பி உறவு "என்று எழுதியதை பார்த்து மனம் உடைந்து போனாள். மணிமேகலை "மனதில் குண்டுஊசி ஒவ்வொன்றாக குத்துவது" கற்பனையாக இல்லை அவளுக்கு அவன் தந்த மிகப்பெரிய பரிசு அதுவாக தான் இருக்கும்.
               மணிமேகலையால் அவனை மறக்கவும் முடியவில்லை, வெறுக்கவும் முடியவில்லை அவளின் வாழ்க்கை அர்த்தமற்று முடிவதையும் அவள் விரும்பவில்லை. மணிமேகலையின் உண்மை காதலுக்கு வேலன் தந்த மிகப்பெரிய பரிசு ஏமாற்றமாக தான் இருக்கும்.
               இந்த சமூகத்தில் ஆண்கள் மட்டும் பெண்களால் ஏமாற்றபடுவதில்லை. பெண்களின் உண்மை காதலுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே. யார் உண்மையாக காதலித்தாலும் அவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே. ஒரு சிலருகே அவர்களின் காதல் வெற்றி கனியாகிறது. மணிமேகலையின் உண்மை காதல் கற்பனையாக போனது. ஆனால், ஒருநாள் அந்த வேலனும் உணருவான்
மணிமேகலையின் உண்மை காதலை நினைத்து ஏங்குவான். அவனின் காதல், அவன் காதலிக்கும் ஒருவரால் அவன் நிராகரிக்கப்படும் போது புரிந்து கொள்வான். மணிமேகலையின் உண்மை காதலை........

எழுதியவர் : பூமணி. க (15-Feb-21, 10:57 am)
சேர்த்தது : பூமணி
பார்வை : 452

மேலே