சில சில்லுகள்

* வறுமையோடு
வாழ மட்டும்
கற்றுக்கொள்ளாதீர்கள்
அதை விவாகரத்து செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.....

* யாரும் வேண்டாம்
எதுவும் வேண்டாம் எனச்சொல்லி
எதை ரசிக்க
ஜன்னலோர இருக்கைகளை
தேடுகின்றேன் நான்....

* பசி எனும் அரக்கனுக்கு இரையாகிக்கொண்டே இருக்கிறது
உடல் என்னும் விருந்து .....

* சில நேரம் சக்கைகளை முழுங்கிவிட்டு
கரும்பு சரியில்லை என தூக்கிஎறிந்துவிடுகின்றோம்.....

* ஏன் நிருப்பித்துக்கொண்டே
இருக்கின்றோம்
பிடிக்கும் என்பதை சொல்லிலும்
பிடிக்காது என்பதை செயலிலும்....

* எப்போதாவது மெல்லிய மலரின்
வாசம் நுகர
எப்போதும் பயணிக்கின்றேன் கல்லிச்செடிகளினூடே...

* நேற்று ஓய்ந்த மழையில்
முளைத்த காளாண்களுக்கு
குடைகளாகின விழுந்த பூக்கள்.....

* நல்லாயிருக்கேன் சாப்பிட்டேன்
என யோசிக்காமல் சொல்லும்போதெல்லாம்
கடந்து போகின்றான்
எனக்குள் இருக்கும் அரிச்சந்திரன்
கேலிச்சரிப்புடன்...........
.
* Miss you - கள் வரும் இடங்களில் எல்லாம்
Bye bye - கள் சத்தமாக ஒலிப்பதில்லை....

எழுதியவர் : ஞானசௌந்தர (10-Apr-21, 4:35 am)
சேர்த்தது : Soundar G
பார்வை : 149

மேலே