சீட்டாட்டத்துப் பேரையா வச்சிருக்கிற
சீட்டாட்டத்துப் பேரையா வச்சிருக்கிற?
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஏன்டா பேரான்டி கண்ணையா....
@@@@@
என்னங்க பாட்டிம்மா?
@@@@@@@
உம் பொண்ணுப் பேரு என்னடா?
@@@@@@@@@
அவுளுக்கு 'ரம்யா' -னு பேரு வச்சிருக்கிறோம்.
@#@@@@@##
ஏன்டா கண்ணையா, நீயும் பெரிய படிப்புப் படிச்சவன். உன்னோட மனைவி மருதாணியும் பெரிய படிப்பு படிச்சவ..(இ)ரண்டு பேருக்கும் மூளையில்ல. சூதாட்டத்திலதான் ரம்மி வெளையாடறானுக..செல்லுப்போனுல ரம்மி வெளையாடி அதிகப் பணத்தை இழந்து எத்தனை பசங்க தற்கொவை பண்ணீட்டானூக. சில பேருக்கு ரம்மியினால பைத்தியம் பிடிச்சு அலையாறானுக..பெத்த பிள்ளைக்கு :ரம்மியா' -னா பேரு வைக்கிறது? இந்தப் பேரைக் கேட்டா நம்ம சனங்க என்னடா நெனைப்பாங்க?
@@||\|||||||||||||###@
அய்யோ பாட்டிம்மா, இந்தப் பேருக்கும் சூதாட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க பொண்ணுப் பேரு ரம்மியா இல்ல..ரம்யா.
@@@@@@@
நானும் ரம்மியானதான்டா சொன்னன்.
@@@@@@@
ரம்யா
@@@|@@
ரம்மியா.
@@@@@@@
'ரம்யா' இந்தி பேரு பாட்டி. அதுக்கு நல்ல அர்த்தம் இருக்குது. 'அழதான' -(Ramya = beautiful, delightful) -ன்னு அர்த்தம்.
#@@@@@#
ஏன், தமிழில்ல 'அழகி' ன்னு பேரு வச்சா குடியா முழுகிப் போகும்?
#@@@######
பாட்டிம்மா காலம் மாறிப்போச்சு. பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கிற பெத்தவங்கள மத்தவங்க யாரும் தமிழரா மதிக்கிறதில்லை. அர்த்தமுள்ள அல்லது அர்த்தமில்லாத வேற மொழிப் பேருங்கள வைக்கிறவங்களத்தான் தமிழரா மநிக்கிறாங்க.
@@@@@@@@
இத இந்திக்காரங்க காதுல கேட்டா நம்மள கேவலமா நெனைப்பாங்கடா கண்ணையா.
@@@@@@@@@
அதப்பத்தியெல்லாம் தமிழர்கள் கவலைப்படறநில்ல.
@@@@@@|
படிச்சவங்க எல்லாம் நம்ம தாய்மொழியைச் சீரழிக்கணும் கங்கணம் கட்டிட்டு திரியறீங்க. அந்த சிவனே வந்தாலும் தமிழர்களத் திருத்த முடியாதடா பேரா.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
