கொரோனா டைரிஸ் - ஹார்லிக்ஸ் பாட்டில்

கொரோனா டைரிஸ் - ஹார்லிக்ஸ் பாட்டில்

அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை ; அளவுகோல் ??
இல்லவே இல்லை !!
அது கடவுளை போல பல பெயர்களை கொண்ட உருவமற்ற உணர்வு...
நீங்கள் அன்பின் வெளிப்படையாக எதை கண்டிருப்பீர்கள்...பணம்?? பொருள்?? உணவு??
அன்பின் வெளிப்படையாக எதை உணர்ந்திருப்பீர்கள் ....இன்சொல்??ஆதரவு??உதவி??
நான் கடந்து வந்தது ஒரு "ஹார்லிக்ஸ் பாட்டில்"ஆம் நீங்கள் படித்தது சரிதான்..
இரவு 9 மணியை நெருங்கி கொண்டு இருந்தது.
நான் என்அன்பிற்கினியவளுக்காக கூரியர் எனப்படும் சிறப்பு அஞ்சல் ஒன்றை அனுப்ப கூரியர் அலுவலகம் சென்று இருந்தேன்.
கட் ஆஃப் டைம் நெருங்கிக்கொண்டு இருந்ததால் வேலை வேகம் பிடித்து கொண்டு இருந்தது.
எனக்கு முன் ஒருவர் இருக்க எதேச்சையாக என் பார்வை பக்கவாட்டில் சென்றது. 70ஐ கடந்த முதியவர் ஒருவர் நின்றிருந்தார்.
கணுங்காலுக்கு மேல் வேட்டியும்,கந்தலுகக்கு நிகரான ஒரு சடையும், கழுத்தில் ஒரு துண்டும் அணிந்திருந்தார்.
அவர் கைகளில் எதையோ மறைத்து பிடித்தார் போல இருந்தது.
அது ஒரு "ஹார்லிக்ஸ் பாட்டில்"
அவரயும் அந்த பாட்டலையும் கண்ட நொடியில் "பெரியவரே இது எல்லாம் கூரியர் பண்ணமுடியாது"என கடிந்து கொண்டார் அந்த புக்கிங் அலுவலர். அந்த பெரியவர் பதில் எதும் கூறாமல் ஒதுங்கி நின்று கொண்டார்.
சில நிமிடங்கள் கழித்து ஒரு குரல் ஒலித்தது " ஐயா வாங்க" என்று.அது அந்த கூரியர் அலுவலகத்தின் மேற்பார்வையாளர். பெரியவரை வணங்கி அந்த பாட்டிலை வாங்கியவர் அதை அந்த புக்கிங் அலுவலரிடம் கொடுத்து "தம்பி இத கூரியர் பண்ணு. கவர்க்கு காசு வாங்கதே"என்று பெரியவரிடம் அவர் பெற்ற விலாசதையும் பணத்தையும் நீட்டினார்.இரண்டு அடி முன் சென்று பின் வந்தவர் "ஐயா மாசம் ஒரு முறை வருவார் ; ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கூரியர் அனுப்புவார , ஞாபகம் இருக்கட்டும்" என்றார் அந்த அலுவரிடம்.

காட்சி முடிந்தது , பெரியவர் சென்று விட்டார் ,நானும் வீடு அடைந்தேன்.
என் மனதில் ஆயிரம் கேள்விகள்
யார் அந்த பெரியவர்??
மாதம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் யாருக்கு அனுப்புகிறார்?
அது சென்றடையும் ஊரில் ஹார்லிக்ஸ் இருக்காதா??
அது சென்றடையும் நபர் யாராக இருக்கக்கூடும்??

அது பெரியவரின்...

தாய் தந்தையா?
அண்ணன் தம்பியா??
அக்கா தங்கையா?
பிள்ளைகளா??
பிள்ளைகளின் பிள்ளைகளா??
அல்லது பெரியவரின் வாலிபத்து காதலியா??

இது எதுவாயினும் என் எண்ணத்தில் தெளிந்தவை இரண்டு...
ஒன்று - இது இந்த ஹார்லிக்ஸ் பாட்டில் அவரது உழைப்பின் ஊதியத்தில் பெற்றது - மாதம்தோறும்
இரண்டு - இது அவரது அன்பின் வெளிப்பாடு; அது யாரை சென்றடைந்தாலும் அதற்கு அளவுகோல் இல்லை , உணர்வுகோல் மட்டுமே!!
- தினேஷ் ஜாக்குலின்-

எழுதியவர் : தினேஷ் ஜாக்குலின் (1-Jun-21, 4:21 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 135

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே