கொரோனா டைரிஸ் - திடம் - டீ யில் தேடுவது அல்ல

கொரோனா டைரிஸ் - திடம் - "டீ" யில் தேடுவது அல்ல

நீங்கள் கொரோனா செய்திகளை உற்று கவனித்தது உண்டா ??

மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழி கண்டது...
மனைவிக்கு பாதிப்பு - செய்வதறியாது தினருகிரான் கணவன்.

கணவனுக்கு பாதிப்பு - ஒரு கையில் கணவனின் கைகளை பற்றிக்கொண்டு; மற்றொரு கையில் குழந்தைகளை பற்றிக்கொண்டு எதிர் வரவை நோக்கி கண்ணீர் மல்க நிற்கிறாள் மனைவி.

யாப்பா ... இவர் பெண்ணியம் பேச போரர் போல ??
இல்ல சார் ... இல்ல !!
இது அதையும் கடந்த பால் வேற்றுமையின் "திடம் என்னும் - உள் வலிமையை" பற்றி!

ஒரு பெண்ணின் மன உறுதியை பற்றி..

நான் கடகின்றேன்,முடிவு உங்களுடையது..
ஞாயிறு முழு அடைப்பு என்பதால் சனிக்கிழமை காலையே உழவர் சந்தையில் அந்த வாரத்திற்கான காய்கறிகளை வாங்க பழகிக்கொண்டேன்.அப்படி ஒரு சனி கிழமை கொள்முதல் முடிந்தது வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
எனது வீடு இருந்த தெருவில் உள்நுழையும் போதுதான் அந்த பெண்ணை கண்டேன்!!
அந்த பெண் 40ஐ கடந்து இருப்பார்.அவர் ஒரு இரு சக்கர வாகனத்தை ஒட முயன்று கொண்டு இருந்தார்.அவர் உடல்மொழியில் ஒரு நடுக்கம்,தடுமாற்றம்,பயம். அவர் அந்த வாகனத்தை ஓடுகிறார் என சொல்வதை விட நகர்த்த முற்படுகிறார் எனவே கூறலாம்.

இது நட்ட நடு சாலையில் நடந்த நிகழ்வானது,என் பார்வயில் பட்டது.என் புத்தி அந்த பெண்ணை எள்ளி நகையாடியது,மேல்பட்ட பால் இனம் அல்லவா !!
வீடு வந்து சேர்ந்தேன்.சிறிது நேரம் கழித்து அந்த பெண் என் வீடு வாசலை கடப்பது கண்டேன்.. அதே வாகனம்..அதே உடல்மொழி..அன்று முழுவதும் இதே காட்சிதான்.
அன்று சாயங்காலம் செவி வழியாக கேட்க விளைந்தது
அந்த பெண் ஒரு பட்டதாரி.தன் இளமை காலத்தில் இந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பாராம்.
அறிவாளி .. ஆனால் அவர்களுக்கு தான் இந்த சோதனை ஓட்டம்.
திருமணம் முடிந்தது.கசப்பான ஒரு இல்லறத்தின் விளைவாக 10 வயதில் ஒரு மகன்.யாரும் அறியாது கணவன் செய்து கொண்ட மறுமணம்.அதை தட்டி கேட்டதின் விளைவு,மகனை பிரிந்து தான் பெற்றோரிடம் வந்தாடைந்தார்.
தாய் தந்தை அரவனைபார்கள்,ஆதரிபார்களா, காலம் தோறும்??
தன்மானம் ஒரு சம்பாதியதை தேடிக் கொள்ள சொன்னது.
அதற்கு ஒரு பணி வேண்டும்,முற்பட்டார் கிட்டியது பணி.
ஆனால் பயண காலத்தையும் தூரத்தையும் கடக்க வேண்டுமே! அதற்கு தான் இந்த சுயமான வாகன பயிற்சி.
"லாக் டவுன்" முடிவில் கிளம்(ப்)பி விடுவார் பணிக்கு!

இதில் என்ன இருக்கின்றது ?? நாட்டில் நடப்பதுதான் என எண்ண தோன்றும்...தவறல்ல! ஆனால்..

ஒரு கசப்பான இல்லறம்
கணவனின் துரோகம்
மகனின் பிரிவு
தாய் தந்தையை பற்றி இருந்து விட கூடாது என்ற வைராக்கியம்
இவை அனைத்தையும் தாங்கும் இந்த பெண்ணின் இதயம் "திடமானது" தானே??


இதே ஒரு ஆண் யெனும் நானாக இருந்தால்..
விரக்தி என்(பான்)பேன்!
என் இயலாமையை ஆற்றாமை என்(பான்)பேன்!!
என் தோல்வியை வாழ்க்கை பாடம் என பரை சாற்று(வான்)வென்!!!
நித்தம் டாஸ்மாக்கில் கானப்படு(வான்)வென்!!

ஆனால் இந்த பெண்ணிடமோ,மகனிடம் பகிர ஆயிரம் உத்வேக கதைகள் மண்டி கிடக்கும் "திடதுடன்"
அவ்வேளையில் ஆண் ஆகிய நா(ன்)ம் பருகும் தேநீரில் மடும் "திடம்" தேடி கொண்டு இருப்போ(ன்)ம்!!!
முடிக்கும் முன் இதை சொல்ல வேண்டும்
இப்பொழுது அந்த பெண் சிரம் உயர்த்தி ,நெஞ்சம் நிமிர்த்தி,பயமின்றி வாகனத்தை இயக்குகிறார் - " திடமாக"

- தினேஷ் ஜாக்குலின்-

எழுதியவர் : - தினேஷ் ஜாக்குலின்- (3-Jun-21, 3:59 am)
பார்வை : 135

சிறந்த கட்டுரைகள்

மேலே