நூலின் பெயர் இரா இரவியின் ஹைக்கூ உலகம் நூலாசிரியர் பொன் குமார் நூல் விமர்சனம் கவிஞர் மு வசீகரன்ஆசிரியர் பொதிகை மின்னல்
நூலின் பெயர் : இரா. இரவியின் ஹைக்கூ உலகம்
நூலாசிரியர் : பொன். குமார்
நூல் விமர்சனம் : கவிஞர் மு. வசீகரன்.ஆசிரியர் பொதிகை மின்னல் ,மின்னல் கலைக்கூடம் , 117.எல்டாம்ஸ் சாலை ,தேனாம்பேட்டை .சென்னை .
வெளியீடு :வானதி பதிப்பகம்
..23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17
தொலைபேசி044 24342810 / 24310769
பக்கங்கள் 118. விலை ரூபாய்110.
கவிஞர் பொன். குமார் ஒரு இலக்கியக் காதலர். நூல் சேகரிப்பாளர். நூல்களைப் படிப்பதோடு, அத்தனை நூல்களுக்கும் மதிப்புரை, கருத்துரை, விமர்சன உரை என எழுதி முகநூலில் பதிவிடுபவர். சிறந்த கவிஞர், எழுத்தாளரும் கூட.
கவிஞர் இரா. இரவி எழுதிய 33 நூல்களில் ஹைக்கூ நூல்கள் மட்டுமே 15 இருக்கின்றன. இதில் 14 நூல்களுக்கு கவிஞர் பொன்.1குமார் எழுதிய விரிவான விமர்சனங்களே ‘கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம்’ என்ற நூல் தொகுப்பாக வந்திருக்கின்றது. ஒவ்வொரு நூலும் அந்நூல் எழுதப்பட்ட காலக்கட்டத்திலேயே பொன்.குமார் அவர்களால் விமர்சனம் எழுதப்பட்டிருக்கின்றது. நூலாசிரியர்களை சிறப்பிப்பதில் பொன்.குமாரின் பங்கு ஏராளம்.
இந்நூலில் இரா. இரவியுடன் பொன்.குமார் நடத்திய நேர்காணலும் 10 பக்க அளவிற்கு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களை கடுமையாக வைத்த போதும், இரா. இரவி ஹைக்கூ எழுதுவதை விடவில்லை. தொடர்ந்து கடமையாகச் செய்து வருகின்றார் என்று குறிப்பிடுகின்றார்.
இணையத்தை திறந்து ஹைக்கூ என தேடினால் அதில் இரா. இரவியின் ஹைக்கூ தான் முன்வந்து நிற்கும் என பொன்.குமார் குறிப்பிடுவதும் மெய்யானதே. நேர்காணலில் இருவரது உரையாடல்களும் நாம் நேரில் பார்ப்பது போலவே உள்ளன. நூலைப் படிக்கப் படிக்க இரா. இரவி, பொன்.குமார் இருவரின் இலக்கிய ஆளுமைகளுமே வியக்க வைக்கின்றன.
பொன்குமாரின் நூல் விமர்சனங்கள் - விரிவான பார்வையில். செரிவான வீச்சாக அமைந்திருக்கின்றன. நூலின் உட்பொருள் பற்றிய பார்வையை பதித்து, நூலுக்குள் நுழைந்து பகுதி பகுதியாக விமர்சித்துத் தள்ளுகின்றார். இந்நூலை வாங்கிப்படித்து சுவையை அறிந்து கொள்ளுங்கள்.