மானுடம் வாழ்த்திடும் பூங்குன்றன்
யாதும்ஊ ரேயாவரும் கேளிர்
தீதிலா உலகச்செய்தி சொன்னான்
தூதுவன் மனித குலத்திற்கு
போதவிழ் எழில்பூந்தமிழ் பூங்குன்றன்
---வ வி
யாதும்ஊ ரேயா வரும்கேளிர் என்றனன்
தீதிலா செய்தி உலகிற்குச் சொல்லினன்
தூதுவன் மானுடம் வாழ்த்திடும் பூங்குன்றன்
போதவிழ் பூந்தமி ழன்
---ஒ வி இ வெ
யாதும்ஊ ரேயா வரும்கேளிர் என்றனன்
தீதிலா செய்தி உலகிற்கு - தூதுவன்
போதவிழ் பூந்தமிழ் பூங்குன்ற னைவாழ்த்தும்
கோதிலா மானுடநெஞ் சம்
----ஒ வி நே வெ
----- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நீண்ட கவிதை
புலவர் பூங்குன்றன் எழுதியது
வலையில் கிடைக்கும் ; விரும்புவோர் படிக்கலாம்

