ஈர்க்குச் சம்பா அரிசி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(‘ர்’ ஆசிடையிட்ட எதுகை)
ஈ’ர்’க்குச்சம் பாஎன் றியம்பும் அரிசியது
நாக்குக்(கு) அதிருசியை நல்குங்காண் – பா’ர்’க்குமிடத்(து)
எல்லார்க்குங் காதல் இயற்றுமற்பப் பித்தமென்பார்
வில்ஆரும் பூசைகட்காம் விள்
- பதார்த்த குண சிந்தாமணி
தெய்வ வழிபாட்டிற்கான இவ்வரிசி நாவிற்கு சுவையையும், உண்ணுவதற்கு விருப்பத்தையும் தரும்; பித்தத்தை உண்டாக்கும்

