தாலியே வேலியாய்
தாலியே வேலியாய்
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆயிரம் பேர் ஆசிர்வதித்து
கட்டிய மஞ்சள் கயிறு
தாலிக் கொடியாய்
கழுத்திலே...
தொப்பள் கொடி உறவை
தூரமாக்கிய ஒற்றை நொடி...
மனக்குழியில்
மறைந்து கிடப்பது
தாலி மட்டுமில்லை
நமக்கான வேலியும் அதுவே...
தங்க நகையேதும் வேண்டாம்
நம் புன்னகை மட்டும் நிலைத்திடட்டும்...
உலகம் சுற்றும் ஆசையில்லை
நம்மை நாம் சுற்றித் திரிகையில்...
கட்டுக் கட்டாய் பணமெதற்க்கு?
உன்னில் முழுதும் நான்
மணந்திருக்க...
கணவணே தோழனாய் வாய்ப்பின்
வேறு வரம் எதற்கு?
-உமா சுரேஷ்