தெங்கு - பனை - இவைகளின் குருத்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தென்னங் குருத்தாற் சிலேஷ்ம வலிநீங்கும்
மன்னுதிர மூலமது மாறுங்காண் - உன்னும்
பனங்குருத்து தின்றாற் பகர்உதிர மூலங்
கனம்பெருகும் பேதியுமாங் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

தென்னங்குருத்து , சிலேட்டும வலியை நீக்கும்; இரத்த மூலத்தைப் போக்கும்;

பனங்குருத்து இரத்த மூலத்தையும் பேதியையும் உண்டாக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-21, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே