கருவேப்பிலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாயி னருசி வயிற்றுளைச்சல் நீடுசுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே யுலகிற்
கருவேப் பிலையருந்திக் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
இது சுவையின்மை, வயிற்றுளைச்சல், பழஞ்சுரம், பித்தம் இவற்றை நீக்கும்