எது கவிதை
எதுகை மோனை அணி சேர்ப்பதா,
எட்டா ஏக்கங்களின் வெளிப்பாடா,
உள்ளது உறைப்பதோ,
உள்ளத்தை உறுக்குவதோ,
அகத்தியர் இலக்கணம் ஏற்பதோ,
அன்பின் ஆழம் உறைப்பதோ,
உயிரும் மெய்யும் சேர்வதோ,
உரை இல்லா உரிச்சொல்லோ,
இயல் மரபில் வந்ததோ,
இசையால் பண் சேர்ந்ததோ,
புணர்ச்சி விதி தவறாததோ,
உணர்ச்சியின் வசம் வந்ததோ,
விழி நீரின் பிம்பமோ,
வழி சொல்லும் அனுபவமோ,
அறியேன்!
மனிதனின் தனித்தன்மை சிந்தனை,
சிந்தனையின் வெளிப்பாடு உணர்ச்சி,
உணர்ச்சியின் மொழி சொல்,
சொல்லின் நயம் அணி,
அணியின் பொருள் அழகு,
அழகின் இலக்கணம் தமிழ்,
தமிழ் என்னும் மொழியே கவிதை.