Lalithachandru - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Lalithachandru |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 2 |
எதுகை மோனை அணி சேர்ப்பதா,
எட்டா ஏக்கங்களின் வெளிப்பாடா,
உள்ளது உறைப்பதோ,
உள்ளத்தை உறுக்குவதோ,
அகத்தியர் இலக்கணம் ஏற்பதோ,
அன்பின் ஆழம் உறைப்பதோ,
உயிரும் மெய்யும் சேர்வதோ,
உரை இல்லா உரிச்சொல்லோ,
இயல் மரபில் வந்ததோ,
இசையால் பண் சேர்ந்ததோ,
புணர்ச்சி விதி தவறாததோ,
உணர்ச்சியின் வசம் வந்ததோ,
விழி நீரின் பிம்பமோ,
வழி சொல்லும் அனுபவமோ,
அறியேன்!
மனிதனின் தனித்தன்மை சிந்தனை,
சிந்தனையின் வெளிப்பாடு உணர்ச்சி,
உணர்ச்சியின் மொழி சொல்,
சொல்லின் நயம் அணி,
அணியின் பொருள் அழகு,
அழகின் இலக்கணம் தமிழ்,
தமிழ் என்னும் மொழியே கவிதை.
ஓர் கரு மண்ணில் பிறக்கவும்,
அவ்வுயிர் விதைக்கவும் ஓர் காரணம் உண்டு.
அன்னை மெய் வருத்தி,
ஆதித்தன் அருள் செய்து,
இருளின் பிம்பம் உடைத்து,
ஈன்றோர் உவகைத்து,
உலகத்தார் பூரித்து,
ஊர் சான்றோர் ஆசி கூறி,
எண்ணங்களில் வலிமை சேர,
ஏர் உழார் விருந்து சேர்க்க,
ஐந்து பூதங்கள் ஆணையிட,
ஒப்பில்லா ஒழுக்கம் சேர்த்து,
ஓங்கியோர் வழி காட்ட,
ஔடதங்கள் துணை செய்து,
பூத்த உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை...
மாய்த்துக் கொள்ளும் நிலையில் கொண்டு செல்ல எவருக்கும் உரிமையில்லை...