தற்கொலைகளை கொள்ளுவோம்

ஓர் கரு மண்ணில் பிறக்கவும்,
அவ்வுயிர் விதைக்கவும் ஓர் காரணம் உண்டு.

அன்னை மெய் வருத்தி,
ஆதித்தன் அருள் செய்து,
இருளின் பிம்பம் உடைத்து,
ஈன்றோர் உவகைத்து,
உலகத்தார் பூரித்து,
ஊர் சான்றோர் ஆசி கூறி,
எண்ணங்களில் வலிமை சேர,
ஏர் உழார் விருந்து சேர்க்க,
ஐந்து பூதங்கள் ஆணையிட,
ஒப்பில்லா ஒழுக்கம் சேர்த்து,
ஓங்கியோர் வழி காட்ட,
ஔடதங்கள் துணை செய்து,

பூத்த உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை...
மாய்த்துக் கொள்ளும் நிலையில் கொண்டு செல்ல எவருக்கும் உரிமையில்லை...

எழுதியவர் : லலிதாசந்துருமதி (4-Jul-21, 10:44 pm)
சேர்த்தது : Lalithachandru
பார்வை : 225

மேலே