முளைக்கீரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தளர்ந்தவர்க்கும் பாலருக்குந் தக்கவய தோர்க்கும்
இளங்கீரை நாவுக் கிதமாங் - கிளம்பு
சுரகாசம் போக்குந் தொடர்பசிஉண் டாக்கும்
பிரகாச மாயெடுத்துப் பேசு
- பதார்த்த குண சிந்தாமணி
காச சுரத்தை நீக்கி பசியைத் தருகின்ற முளைக்கீரை எல்லா வயதோர்க்கும் சிறந்ததாகும்.