மார்கழிப் பனியில் மௌன விழியாள்

மார்கழிப் பனியில் மௌன விழியாள்
பூவிதழ் தன்னில் புன்னகை ஏந்தி
கார்முகில் கூந்தலில் மல்லிகை சூடி
தேராய் ஆலயம் செல்கிறாள்
பாவைய ருடன்மாத வன்புகழ் பாடிடவே !

---------------------------------------------------------------------------------------------------------------
யாப்பார்வலர்களுக்கு
ஆசிரியத்தளை ஈரசைச் சீர் மிகுந்து ஈற்றயலடி முச்சீரால்
அமைந்து ஏகார ஓசையுடன் முடியும் நேரிசை ஆசிரியப்பா


மார்கழிப் பனியில் மௌன விழியாள்
பூவிதழ் தன்னில் புன்னகை ஏந்தி
கார்முகில் கூந்தலில் மல்லிகை சூடி
தேராய் ஆலயம் செல்கிறாள் கோதை
பாவைய ருடன்மாத வன்புகழ் பாடிடவே !

----எல்லாம் அளவடி -நாற்சீரடி ஆனதால் நிலைமண்டில ஆசிரியப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-21, 11:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே