மனிதம் எங்கே

கருப்பை அறியா
மழலை இன்று
சுக்கிலம் சுமக்கிறது,
குப்பை அள்ளும்
கொடுமையை எல்லாம்
கொண்டாட்டமாய் பார்க்கிறது,
வறுமை முள்ளில் சிக்குண்டு
கிழிந்த ஆடைகளை எல்லாம்
கீழ்த்தனமாய் ரசிக்கிறது,
மலக்குழி மனிதர்கெல்லாம்
மரணதண்டனை கொடுக்கிறது,
உண்ண உணவு கேட்டால்
உடலிர்க்கு பசி என்று
காமச்சோறு போடுகிறது,
நரையும், முதுமையும்
முத்தமிடும் வேலையில்
முதியோரை முச்சந்தியில்
முகம் சுழித்து தள்ளுகிறது,
மனிதம் ஏனோ
நிர்வாணக் கோலம் கொள்கிறது,
அதனால் தான் என்னவோ
மறைந்து மறைந்து வாழ்கிறது
இதனிடையில்
தேடி தோற்றுப் போனேன்
மனிதத்தின்
தொலைந்து போன
முகவரியைத்
தேடி...

எழுதியவர் : தமிழ் வழியன் (25-Jul-21, 3:39 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
Tanglish : manitham engae
பார்வை : 523

மேலே