சொத்து

பெற்ற பிள்ளைகள் தந்தையிடம்
அவரது முதுமையில் கேட்டனர்
எங்களுக்கு சொத்தை பிரித்து
தாருங்கள் என்று அதன் படி
சொத்து பிள்ளைகளுக்கு
பிரித்துக் கொடுக்கப்பட்டது
சொத்தை வாங்கி கொண்டு
புறப்பட்டனர் பிள்ளைகள்
இறுதியாக தங்கள் தாயை
மட்டும் தந்தைக்கு சொத்தாக
விட்டுவிட்டு.

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Jul-21, 2:01 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : soththu
பார்வை : 90

மேலே