தமிழ் வழியன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழ் வழியன்
இடம்:  பழநி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jun-2021
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  11

என் படைப்புகள்
தமிழ் வழியன் செய்திகள்
தமிழ் வழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2021 9:58 pm

உணவு வடித்த பாத்திரம்
இரவில் காலியாய் கிடக்கிறது
தாயின் வயிறு

நன்மையும், தீமையும்
தெளிவாய் ஜொலிக்கிறது
பள்ளியருகே மதுக்கடை

சமமாய் நிகழ்கிறது
ஆக்கலும்,அழித்தலும்
காடுகள் அழிப்பு

அட்சரேகை
இரண்டாக பிரிக்கிறது
அவளின்( குழந்தை )உதட்டை

மழைப்பஞ்சம்
ஒன்றெனக்காட்டியது
வயலையும்,வயிற்றையும்


அதிகாலைச்சூரியன்
தொலைவிலே நிற்க்கிறது
அதற்க்கும் மாதவிலக்கு

வெட்ட நினைத்தாலும்
மீண்டும் முளைக்கிறது
ஆணவக்கொலை

இரவின் நிழல்
காற்றின் கைரேகை
ஏழைக்கனவு

மாடி வீட்டை கூரையோடு
சண்டையின்றி இனைக்கிறது
சிலந்திவலை

யாரெனத் தெரியாமல்
சமன்செய்கிறது
சுடுகாட்டில் சம்மட்டி

மேலும்

தமிழ் வழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2021 9:47 pm

வீட்டின் மானம்மறைத்தும்
அம்மணமாகிறது
வாசற்கதவு...!

தச்சன் வீட்டில்
கதவிற்க்குப் பதிலாய்
கோணி...!

உயிர்வாழ
இரத்தபழி கேட்கிறது
இருதயக்கதவு...!

மயானத்தில் மூதாட்டி
முழுவதும் மூடிவிட்டது
இமைக்கதவு...!

அடைக்கப்பட்ட கழிப்பறையிலும்
வரிசையாய் நிற்கிறது
பூட்டியகதவு...!

ஓங்கித் தட்டியும்
திறக்கவில்லை
அகதிக்கு உரிமை...!

திறக்கப்பட்ட கதவு
பூட்டியே இருந்திருக்கலாம்
தந்தைமரணம்...!

மேலும்

தமிழ் வழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2021 10:58 pm

அகதிகள் அகராதியில்
அகதிக்கு பேரர்த்தம்
அம்மா அப்பா
இருந்தனர் அன்று
அகதியென
அடைமொழி இன்று

கற்பை விற்று
கஞ்சி ஊத்தும்
தாய்மையின்
கரங்கள் கண்டோம்
தொண்டை வற்றி
கதறி அழும்
பிள்ளையின்
ஓலங்கள் கேட்டோம்

பிறப்பும்,வளர்ப்பும்
மாறுபட்ட ஒன்று,
பிறப்பில்
தாயின் அடிமடியிலும்,
வளர்ப்பில்
சாலையின் தெருக்கோடியிலும்,

சொந்தங்கள் யாவும்
அனாதையாய் போக
அனாதைகள் நாங்கள்
அகதியாய் மாற
அகதிகள் எல்லாம்
சொந்தங்கள் ஆனோம்...

கையில் குழந்தை,
கறை படிந்த உடல்,
ஒட்டிய வயிறு எங்கள்
அடையாளம் என்றனர்
ஓயா சிந்தை,
விடுதலைத் தேடல்,
ஒரே தேசம் எங்கள்
அடையாளம் என்றோம்...

தெருநாய்களின் இருப்பிடம்
அரசாங்க
கம்பிகளுக்க

மேலும்

நீள் துயரத்தின் ஆழமான பதிவுகள்- ஏதிலிகளாய் ஆக்கப்பட்டவர்களே, ஆற்றல் தரும் கல்வியைக் கற்று, காற்றென ஞாலம் முழுவதும் பயணித்து நமக்கு தேவையான சட்டத்தைக் கற்று வீரு கொண்டு வாழ்வு பெறுவோம். அறிவு அனைத்தையும் அடிபணிய வைக்கும் கொஞ்சம் காலமாகும், பின்னாளில் நிலைத்த வெற்றியைத் தரும். தமிழறிந்தோர் என்றும் மனச்சோர்வு அடைதல் கூடாது என்று கொள்கையுடன் முயலுவோம் - அர்த்தம் நிறைந்த பதிவு. 28-Jul-2021 10:16 am
தமிழ் வழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2021 3:50 pm

கம்பனால்
கவிவடிக்கப்படாத
ஒரு கவிதை
நீ

கவிவடிக்க காத்திருந்து
கரம் கோர்க்கும்
தோழன்
நான்

நிழல் உரு
நீ
உயிர் தரும்
ஒளி
நான்

உவமை வடிவம்
நீ
ஒலி தரும்
மொழி
நான்

அழகு வடிவம்
நீ
வர்ணம் பூசும்
தூரிகை
நான்

நீயின்றி நானும்
நாணின்றி வில்லும்
இயங்குதல்
எப்படி...?

இடை இன்றி
இணைவேன்
இன்னிசை கூறிடு
இப்படி...

ஆண்மை அளித்தது
ஆண்டவன் என்று
அறிவேன் அழகே
அனைத்தும் உணர்ந்தது
உன்னிடம்
உலகே

என் நினைவின் ரீங்காரம்
நிசப்த நொடியில்
நித்திரை கொள்வதை
நீ மட்டுமே அறிவாயா...?
காரணம்,
என் நினைவு சிறைச்சாலை
உன் நினைவென ஏற்க
மறுப்பாயா......?

அன்பு தோழியே
எப்படியடி நான்
உனக்கு புரியவைப்பேன்
நான்
புதைந

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே