எப்போதடி வருவாய்

எப்போதடி வருவாய்...?

அருகருகே அமர்ந்தபடி
காதல் மொழி
பேசியதில்லை
அறியா தூரமிருந்தும்
அழுகாமால்
இருந்ததில்லை

நான் விட்ட
மூச்சுக் காற்று
உன் வீட்டு முற்றம் தொட்டு
என்னைப் பற்றி பேசுமா
பதில் ஏதும்
தெரியவில்லை

அடிவயிற்று பசிகூட
அடியோடு மறந்து போகும்
அவஸ்தையின் சுகத்தை
அனுபவித்த நேரம் எது
புரியவில்லை

இணையதள வசதியிருந்தும்
இதயங்கள்
இணையவில்லை
உனக்கான கடிதத்தை
கிழிக்காமல்
எழுதியதில்லை

எண்ணற்ற பெரும் கனவு
தோன்றாமல் விடிவதில்லை
துயிலற்ற பெரும் துயர்
அதை அழிக்காமல்
விடுவதில்லை

என்னோடு நீயும்
உன்னோடு நானும்
புன்னகைத்தே
போன காலம்
புகைப்படம் ஆனது
ஏனடி ?

துயரோடு நானும்
நினைவோடு நீயும்
புலம்பித் திரியும் காலம்
இப்போது இருப்பதும்
ஏனடி ?

நித்தம் ஒருமுறை
உன்முகம் காட்டும்
தொலைபேசி தொடுதிரை
கடவுளானது உன்னால்
தானடி

நீ ரசித்த வண்ணத்தில்
ஆடை வாங்கி
அழகு பார்த்ததும்
உன்னால்
தானடி

விரைவில் வந்துவிடு
நமக்கு பிடித்த பாடலை
ஒன்றாய் உளராமல்
பாடுவதற்கு வந்துவிடு

சீக்கிரம் வந்துவிடு
சிறுசிறு சண்டையிட்டு
கட்டிப்பிடித்து ஆறுதல்
சொல்வதற்கு வந்துவிடு

காதலியே வந்துவிடு
கனவில் தந்த
நெற்றி முத்தத்தை
நேரில் தருவதற்கு வந்துவிடு

வாழ்க்கையே வந்துவிடு
வாழ்நாள் ஆசைகளை
மொத்தமாய் கொட்டி
தீர்ப்பதற்கு வந்துவிடு

இனியவளே வந்துவிடு
தொலைதூர என்னுயிரே
தூரம் தொலைத்து
என்னிடமே வந்துவிடு

சுவாசமானவளே வந்துவிடு
சொல்லவந்த வார்த்தைகளை
சோகம் தின்ற மிச்சத்தால்
கூறுகிறேன் வந்துவிடு

வந்துவிடு
உன் உயிர்
அழைக்கிறேன்
உடனே வந்துவிடு

வருவாய் என்ற
நம்பிக்கையில்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்
கவிதை வரிகளுக்கும்.
கண்ணீர் வருவதற்கும்..

வந்துவிடு.
வந்துவிடு..
வந்துவிடு...

எழுதியவர் : தமிழ் வழியன் (11-Jul-22, 6:57 am)
சேர்த்தது : தமிழ் வழியன்
பார்வை : 305

மேலே