கவிதையின் கைத்தட்டல்

கவிதையின் கைத்தட்டல்

அன்றொரு நாள்
காலையில்
நானும் அவளும்
எதிரெதிரே
முகங்களை பார்த்து
புன்னகை செய்கையில்
மணி பத்தாகியிருந்தது....

என்னை நோக்கி
அவளும்
வெட்கத்தை நோக்கி
நானும்
மெல்ல மெல்ல
நகர்ந்து கொண்டிருந்த
தருணம் அது....

உடலின்
படபடப்பினாலும்
அவள் விழியின்
படப்பிடிப்பினாலும்
நான்
வியர்வையினால்
மொத்தமாய்
குளித்துவிட்ட
தருணம் அது....

தரையை முத்தமிட்டு
தத்திவரும்
அவள் பாதம்
என் நிழல் மீது
நிற்கும் முன்னரே
" ஏ... இப்பெல்லாம்
கவிதை எழுதுவதில்லை "
என்றாள்...

வெட்கத்தின் உச்சியில்
நின்றிருந்த
நான்
மெல்ல கீழிறங்கி
அவளின்

எழுதியவர் : தமிழ் வழியன் (3-Jul-22, 8:06 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
பார்வை : 120

மேலே