அவளின்றி அகிலமில்லை..

💟💟💟💟💟💟💟💟💟💟💟

*கவிதை*

படைப்பு *கலிதை ரசிகன்*
குமரேசன்

💟💟💟💟💟💟💟💟💟💟💟

என்னவளே!

கண்களை திறந்தால்
காட்சியாய் தெரிகிறாய்..
கண்களை மூடினால்
கனவாய் வருகிறாய்....

பாடலைக் கேட்டால்
இசையாய் ஒலிக்கிறாய்...
மழையை ரசித்தால்
துளியாய் தெரிகிறாய்...

தனிமையில் இருந்தால்
நினைவாய் வருகிறாய்...
தண்ணீரில் குளித்தால்
பிம்பமாய் தெரிகிறாய்....

பூக்களைப் பார்த்தால்
புன்னகை செய்கிறாய்...
கனியை சுவைத்தால்
இனிப்பாய் இருக்கிறாய்....

புத்தகம் படித்தால்
ஏடுகளாய் வருகிறாய்.....
பூங்காவிற்குச் சென்றால்
தென்றலாய் அணைக்கிறாய்..

சிந்தனை செய்தால்
கவிதையாய் வருகிறாய்....
சீராகக் கிறுக்கினால்
சித்திரமாய் தெரிகிறாய்...

நீ இல்லாமல்
இவ்வுலகில் எதுவும் இல்லை...
நீ இல்லையென்றால்
இவ்வுலகமே எனக்கில்லை....

*கவிதை ரசிகன் குமரேசன்*

💟💟💟💟💟💟💟💟💟💟💟

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Jul-22, 9:25 pm)
பார்வை : 30

மேலே