ரசிக்கதானே செய்தேன்
அவளை நான் பார்க்கும்
அத்தனை முறையும்
தெரியாதது போல்
நடித்தவள் - இன்று
"என்னைய எதுக்கு டா
சும்மா சும்மா
பாத்துகிட்டே இருக்க,
இனி அப்படிலாம் பாக்காத" என
வார்த்தையின் சூட்டில்
குளிர வைத்து
வெட்கத்தால் மிரட்டியவளிடம்
" நான்
ஒரு போதும்
உன்னை பார்த்ததே
கிடையாது,
ரசிக்க தானே செய்தேன் "
என்றேன்...
வெட்கத்தால் மிரட்டியவள்
சிரிப்பால் மிளிர்கிறாள்....!