வந்தாய் இளவேனில் தென்றல் போலே

கலைந்தாடும் பூங்கூந்தல் கார்மேக வண்ணம்
அலைபாயும் கண்கள் கடல்நீல வண்ணம்
வளையோசை கையில் இசைபாட வந்தாய்
இளவேனில் தென்றல்போ லே


கலைந்தாடும் பூங்கூந்தல் கார்மேக வண்ணம்
அலைபாயும் கண்களோ நீலம் --சிலைநீ
வளையோசை கையில் இசைபாட வந்தாய்
இளவேனில் தென்றல்போ லே

--- இரு விகற்ப நேரிசை வெண்பா----மேலே இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-22, 6:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே