நண்பர்கள்
நான் கல்லூரி
பேச்சுப் போட்டியில்
கருவில்லாமல்
பேசியதில்
நடுவருக்கு
திருப்தி இல்லை.
இருந்தபொழுதிலும்
என் பேச்சின்
இடை இடையே
கை தட்டி
ஆர்ப்பரித்து
நடுவரையே
நடுங்க வைத்து
முதல் பரிசு
வாங்க வைத்த
என் நண்பர்களை
இன்றளவும்
மறப்பதில்லை.
அந்த பரிசிலும்
எனக்கு
திருப்தி இல்லை.
அந்த
கசப்பான
அனுபவம் தான்
இன்று
என்னை
உரை வீச்சில்
வல்லவனாய்,
என் நண்பர்களின்
இதயத்தில்
என்றென்றும்
உறைபவனாய்
உயர்ந்த இடத்திற்கு
உயர வைத்து
அழகு பார்த்தது.
ரோஹித்கணேஷ்
திருச்சி