சம்பங் கோழிக் கறி - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா
வறட்சி சொறிசிரங்கு வன்கரப்பன் என்னுந்
திரட்சி யொடுபலநோய் தீரும் - பொருட்சிகரி
கும்பங் கடாக்களிற்றின் கோடெனச்சொல் பூண்முலையாய்
சம்பங்கோ ழிக்கறிக்குத் தான்
- பதார்த்த குண சிந்தாமணி
சொறி கிரந்தி, தோலில் வறட்சி, கரப்பான் முதலான பல நோய்களை சம்பங்கோழிக் கறி நீக்கும்