அந்த ஒரு நிமிடம்
அந்த ஒரு நிமிடம்,
காணும் காட்சி(க்காக)கள்,
வருவோரைக் கண்டு
கை ஏந்தும் சிறுமியைப் போல்!
அந்த ஒரு நிமிடம்,
குழந்தைக்கு ஊட்டும் உணவில்,
நாவிலிருந்து சிதறும் சாதத்தை,
உண்டுவிடும் அம்மா போல்,
அந்த ஒரு நிமிடம்,
ஆசிரியர் பல வருடங்களுக்கு பின்,
தன் பெயரை உச்சரிக்கும் போது,
ஏற்படும் உணர்ச்சியைப் போல்,
அந்த ஒரு நிமிடம்
வாழ்க்கையாக கடந்தும் செல்கிறது,
கால நொடி(நாட்)கள்
வருங்கால ஏங்கும் ஏக்கங்கள்,
எல்லாம் என்பதற்குள், ஏற்கனவே
நினைத்து முடித்து இருக்கிறாய்,
நேற்றிரவில்,
இன்றிரவில் புது கனவுகளை,
புதுப்பிக்க உலாவுகின்றன இமைகள்,
கனவுகளை வைத்தே
கைகூடிக் கொள்கிறேன்.
கனவுகள் தோழனாக இருப்பதால்
இமை விழிக்காமல் கனவுகளில்..
வெள்ளூர் வை க சாமி
(அண்ணா நூற்றாண்டு நூலகம்)