இயல்பாய் வாழவிடு

உயிருக்கு விலையேது
உலகில் கேள்வியாய்/
தேம்பித்தான் வாழ்வில்
வியந்து போகும் மனிதன் ,
அழிவின் விளிம்பில்
அலையும் மானிடன் ,
எங்குமே பதட்டம்
எதனால்/ எப்படி புரியவில்லை.
பதவியும், பணமும் ,பொய்யும் ,களவும்
ஏமாற்றும், பித்தலாட்டமும்
வாழ்வாகி விட்டது.
இதனால் இயற்கை அழிகின்றது
நீதி நியாயம் நிலையில் இல்லை,
தடம் புரளும் மனிதன்
நிலைகொள்ள தவறுகிறான்,
அழகிய உலகை அபாயகரமாய்
எதிர்கொள்ள தீர்மானித்து
தன்னைத் தானே அழித்து
அகிலமும் அழிய வழி கோலுகின்றான்
இயற்கையின் வலுவை இயல்பில்
வாழவிடு சிந்தித்துப் பார்
நாலாபக்கமும் சிதையும் உலகை...
இயற்கையை அழிக்காதே மனிதா
இயல்பாய் அவற்றை வாழவிடு .

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Aug-21, 12:09 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : eyalbaai valavidu
பார்வை : 99

மேலே