வெள்ளூர் வை க சாமி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வெள்ளூர் வை க சாமி
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி :  07-Apr-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2021
பார்த்தவர்கள்:  202
புள்ளி:  16

என்னைப் பற்றி...

முயற்சி செய் .......

என் படைப்புகள்
வெள்ளூர் வை க சாமி செய்திகள்
வெள்ளூர் வை க சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2021 1:05 pm

வறண்ட பாலைவனம்
போல் உள்ள மனதில்
நாட்களும், நாழிகையும் நகர்வதில்லை.

இரு கண்கள் இணைவில்
பசுமை அடைந்த செடி போல்
நாட்களும், நாழிகையும் தெரிவதில்லை.

அருகே நின்று உரையாடும்
பலரின் முகம் பார்ப்பதில்லை,
நாட்களும், நாழிகையும் அவள் வருகை நோக்கி.

பிரிவுயுற்ற பின்
தன்னையும் மீறி கரையும் கண்ணீர்,
ஆகாய மழையுடன் இணைந்து விழுவதால்
நாட்களும், நாழிகையும் புரிதலுடன் இனி…….

புது யுகத்துடன்…….
வெள்ளூர் வை க சாமி

மேலும்

வெள்ளூர் வை க சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2021 1:29 pm

என் உயிரினும் மேலான, அன்பு உடன் பிறப்புகளே
நான் உறங்கிவிட்டேன் என்று பலரும்
நினைத்ததுண்டு, மகிழ்ததுண்டு,

நீண்ட நாளுக்கு பிறகு ஒரு கடிதம் ,
என் கல்லறையிலிருந்து உயிர் பிக்கபடுகிறது,
என் அண்ணாவின் ஆசீர்வாதத்தோடு,

அண்ணா உயிர்ப்பித்த கழகம்,
பெரியார் வழி நடத்திய கழகம்,
நான் பயணித்த இக்கழகம்,

வேல் எடுத்தவர் வெற்றி பெறவில்லை,
உரக்க உரையிட்டவர் வெற்றி பெறவில்லை
விவசாயி என்றவரும் வெற்றி பெறவில்லை,

சாதிக்காக உயிர்பித்தவரும் வெற்றி பெறவில்லை,
மலரும், மொட்டும், வெற்றி பெறவில்லை,
மாற்றம் முன்னேற்றம் வெற்றி பெறவில்லை,
செங்கல் வைத்தவரும் வெற்றி பெறவில்லை,

ஆம்
இந்த வெற்றி என் க

மேலும்

வெள்ளூர் வை க சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2021 6:32 pm

இக்கவி எழுத வேண்டும், என்று
முன் யோசனையில்லை,

முன் ஏற்பாடுமில்லை,
தலைப்புகளும் இல்லை,

எழுத தொடங்கும் முன்,
எழுதுகிற இடத்தில் இருந்து,

புலம்பெயர்ந்து விடுகிறேன்,
சுவற்றில் தள்ளாடும் தட்டான் போல,

யதேச்சியாக எழுதும் கவிஞர்களில்,
ஏதாச்சும் எழுதுபவன் நான்.

நான் கிறுக்கிய வரிகளில்,
பிடித்தோர் பாராட்டுவர்,

பிடியாதோர் ஏசுவர், இவை
இரண்டை தவிர வேறில்லை,

வரிகளை எழுதி வலைதளங்களில்,
இட்டுவிட்டு , விட்டு விடுகிறேன்,

அதை காண்போர் யார் என்றும்,
பார்பதில்லை, நினைப்பதுமில்லை,

கிறுக்கு பிடித்தவனின், கிறுக்கிய
வரிகளை, இன்று யதேச்சியாக,

தங்களின் கிறுக்கள் அருமை

மேலும்

வெள்ளூர் வை க சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2021 3:00 pm

வெகு நேரம் நீண்ட வரிசையில்,
காலி குடத்துடன் காத்திருந்தும்,

ஒரு சில மணி நேரத்தில்,
நின்று விடும், குழாய் தண்ணீர்,

இவ்விடையில் ஓர் முறையினும்,
ஜன்னலோரத்திலும், திண்ணையலமர்ந்தும்,

நெடுவாசலில் இருந்து வெளிவரும்
காளைகளை உற்று நோக்கும்,

காளையர்களை போல், என் விழிகள்
மட்டும் அங்கும், இங்கும், எங்கும்,

அடுத்து நீ தான் என்று
அங்கு ஓழித்த ஓசை மட்டும்,

என் காதினில், அவ்வோசை தவிர,
அவள் வரவை எண்ணி ,

என் முகம் மலர்ந்த போது,
என் வரிசையை விட்டுவிட்டு,

தண்ணீரும் நின்று விட,
தரிசனமும் நின்று விட,

காலி குடத்துடன் வீடு வந்து
அம்மாவின் குடமுழக்கை பெற்றேன்..........

மேலும்

வெள்ளூர் வை க சாமி - வெள்ளூர் வை க சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2021 3:25 pm

பரபரப்புக்கு பஞ்சமில்லை,
வாழ்க்கையில்,
வலியோர் நெடுங்கிலும்,
புன்னகையோடு,

அன்றாட தேவைகளை
நிறைவேற்றும்,
சில பிஞ்சு விரல்களில்
வலம் வந்த ரோஜாவை,

என்னிரு கைகளில் அடக்கி,
அவள் வரும் வழியில்,
விழி வைத்து, கார்த்திருக்கிறேன்,
மணந்த பூவோடு,

மறுகரம், விரல்கள் இணைந்து
பரிமாற்றம் ஆன பின்,
அவள் சென்ற பாதையில்,
என் காலடி சிறிதூரம் சென்ற பின்,

ரோஜாவின் இதழ்,
விரிந்து கான்கையில்
நினைவுகள் திரும்புகிறது,

வீசிஎறிந்தது உன்னை அல்ல என்று

ஏனெனில், ரோஜாவின் முட்கள்,
என் விரல்களில் முத்தமிட்ட போது.
நான் நானாக எண்ணி
வெள்ளூர் வை க சாமி

மேலும்

நன்றி ஐயா...... தங்களின் வாழ்த்துகளுக்கு...... 21-Apr-2021 1:59 pm
அழகான நகர்வு திருப்பத்துடன்... வாழ்த்துகள்... 21-Apr-2021 1:43 pm
மேலும்...
கருத்துகள்

மேலே