தலை நிமிரடடும் தமிழகம்

என் உயிரினும் மேலான, அன்பு உடன் பிறப்புகளே
நான் உறங்கிவிட்டேன் என்று பலரும்
நினைத்ததுண்டு, மகிழ்ததுண்டு,

நீண்ட நாளுக்கு பிறகு ஒரு கடிதம் ,
என் கல்லறையிலிருந்து உயிர் பிக்கபடுகிறது,
என் அண்ணாவின் ஆசீர்வாதத்தோடு,

அண்ணா உயிர்ப்பித்த கழகம்,
பெரியார் வழி நடத்திய கழகம்,
நான் பயணித்த இக்கழகம்,

வேல் எடுத்தவர் வெற்றி பெறவில்லை,
உரக்க உரையிட்டவர் வெற்றி பெறவில்லை
விவசாயி என்றவரும் வெற்றி பெறவில்லை,

சாதிக்காக உயிர்பித்தவரும் வெற்றி பெறவில்லை,
மலரும், மொட்டும், வெற்றி பெறவில்லை,
மாற்றம் முன்னேற்றம் வெற்றி பெறவில்லை,
செங்கல் வைத்தவரும் வெற்றி பெறவில்லை,

ஆம்
இந்த வெற்றி என் கழக கண்மணிகள்
இல்லாமல் இல்லை.
என்னிலம் ஏகமாய் எழுந்தது.

வங்ககடலோரம் இருந்த காற்று ,
இனி வீசட்டும் மலர்ந்த தமிழகம் நோக்கி,

செம்மொழியில் தவழ்ந்த என் தமிழ்தாய் ,
தலை தூக்கி தரணியில் வலம் வர ,
தலை நிமிரடடும் தமிழகம்.

கல்லறையில் இருந்து

என் தமிழ் கவிஞன்

எழுதியவர் : வெள்ளூர் வை க சாமி (3-May-21, 1:29 pm)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
பார்வை : 1694

மேலே