உனையல்ல
பரபரப்புக்கு பஞ்சமில்லை,
வாழ்க்கையில்,
வலியோர் நெடுங்கிலும்,
புன்னகையோடு,
அன்றாட தேவைகளை
நிறைவேற்றும்,
சில பிஞ்சு விரல்களில்
வலம் வந்த ரோஜாவை,
என்னிரு கைகளில் அடக்கி,
அவள் வரும் வழியில்,
விழி வைத்து, கார்த்திருக்கிறேன்,
மணந்த பூவோடு,
மறுகரம், விரல்கள் இணைந்து
பரிமாற்றம் ஆன பின்,
அவள் சென்ற பாதையில்,
என் காலடி சிறிதூரம் சென்ற பின்,
ரோஜாவின் இதழ்,
விரிந்து கான்கையில்
நினைவுகள் திரும்புகிறது,
வீசிஎறிந்தது உன்னை அல்ல என்று
ஏனெனில், ரோஜாவின் முட்கள்,
என் விரல்களில் முத்தமிட்ட போது.
நான் நானாக எண்ணி
வெள்ளூர் வை க சாமி