காதல் மந்திரம்

காதல் என்னும்
"மந்திரச்சொல்"
காற்றினில் மிதந்து வந்து
காதில் ஒலித்து விட்டால் ..!!

கயிறுக்கொண்டு
கட்டி வைத்த காளையும்
கட்டை அவிழ்த்து கொண்டு
ஓடிவிடும் ..!!

கட்டுக்கு அடங்காமல்
சுற்றி திரிந்த காளையும்
கயிறு இல்லாமல்
காலடியில்
கட்டுப்பட்டு நிற்கும் ...!!

காதல் என்னும்
மூன்று எழுத்து
மந்திர சக்தியை
என்னவென்று
சொல்வதம்மா ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Sep-21, 11:42 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal manthiram
பார்வை : 146

மேலே