எண்ணிவிடக் கூடாது

சேர்த்து வைக்கும் செல்வமும்
சொத்தும் தீர்மானிக்கும்
வாழ்க்கையின் வெற்றியை—அதனால்
வந்தடையும் பணத்துக்காக
வாழ்நாள் முழுதும் உழைத்தால் தான்
வாழமுடியும் வையத்தில்

செல்வத்தை அதிகரிக்க
தேடிக்கொண்டே இருப்பது
தவறில்லை யென்றாலும்
நாம் செலவிடும் கால விரயமும்
நமது கடின உழைப்பும்—பறித்துவிடும்
நமது குடும்பத்தின் மகிழ்ச்சியை

கை நிறைய சம்பாதித்தாலும்
குழந்தைகளோடு செலவழிக்கும்
நேரம் குறையும்—அவர்களுடன்
நெருக்கமாக பழகவும்
கண்காணிக்க முடியாமலும்
குழந்தைகள் கெட்டுவிட வழியுண்டு

வாழ்க்கையில் செல்வம்
உடல் ஆரோக்கியம், மன நலம்
மூன்றும் சம அளவில் இருப்பது சிறப்பு
செல்வம் மட்டுமே
வெற்றியையும், மகிழ்வையும் தருமென
எண்ணிவிடக்கூடாது.

எழுதியவர் : கோ. கணபதி. (29-Oct-21, 1:20 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 73

மேலே