பெண்ணிலவு நீதானடி
நிலவு காயும் நேரம்
இளந்தென்றல் தாலாட்ட
உடல்மறந்து உயிர்
காற்றினில் மிதக்கயிலே
பொன்னொளி வீசும்
வெண்ணிலவைக் கேட்டேன்
"உனை பார்த்து
இதயம் தொலைத்த
ஓராயிரம் கோடியில்
நானும் ஒருவன்,
இதயம் தொலைத்து
இதம்பெறவேண்டின்
பார் எந்தன் கலைமகளை,
இழுத்த போர்வையில்
இன்முகம் காட்டி - உன்
இதயம் கொய்யும்
கறைபடியா முழுமதியாய்
கொள்ளை அழகை..
அனுபவம் வேண்டின்
அவளிடம் தொலைத்து பார்
ஒருமுறை தொலைத்தால்
தினம் தொலைக்க
ஆசை கொள்வாய்."
நடமாடும் வெண்ணிவு
எந்தன் பெண்ணிலவு..
நீதானடி என் தங்கமே..!