குளியல்
அறுசீர் விருத்தம்
அன்னை வயிற்றில் எவனும்
*****அங்கக் குளியல் அறியவில்லை
சின்ன வயதில் அன்னை
***** நீராட் டியஞா.பகமுண்டு
பின்னே தயவின் றியவன்
*****நீரால் குளித்தான் தினம்தினமே
பின்னும் தள்ளா வயதில்
******ஈரத் துணியால் துடைப்பதேனோ
காடு கழனி எல்லாம்
***"**மகிழ்ந்து குளிக்கும் பார்மழையில்
ஆடும் மாடும் தவறா
""""""வாரமோர் நாள்வீட் டில்குளிக்கும்
பாடு படுமாம் கழுதை
*****யையும் குளிக்க வைப்பதுண்டு
ஓடும் நாயை வாரம்
******ஒருநாள் நீரில் குளிக்கவைப்பர்
வாடும் மரமோ மழையின்
*****வருகை யன்றே மகிழுதப்பா
காட்டு யானை நீரைக்
*****காண குளிக்கா நகராதே
காட்டு மிருகம் பறவை
**"**"மழையில் நனைந்து பதுஙகும்பார்
வாட்டும் மீனோ யென்றும்
***அறியா குளியல் உண்மைதானே
நாட்டு. மக்கள் அறிவர்
*****தெரிந்தும் சொன்னேன் வேண்டுமென்றே