பேரைச் சொல்ல வெட்கம்

என் பேரைக் கேட்காதே
அதைச் சொல்ல எனக்கே
வெட்கமாயிருக்குதடி!
வீட்டில் உன்னை எல்லோரும்
அம்மு என்ற அழைக்கின்றார்
சான்றிதழில் உள்ள உந்தன்
பெயரைத் தான் நான் கேட்டேன்.
அந்தப் பெயர்தான்டி எனை
வெட்கப்பட வைக்கிறது.
வெட்கப்பட வைக்கும்
அப்பெயரைக் கூறவும்
உன்க்கேன்டி வெட்கம்?
"நைனா" என்றுனை அழைத்தால்
மகிழ்ச்சி அடைவாயா நீ?
என் பெயர் அதுதான்டி
வெட்கப்பட வைக்கிறது.
இந்தி 'நைனா' சரிதான்டி
கண்களைக் குறிக்கிறது.
தமிழ் 'நைனா' தானடி எனை
தலைகுனிய வைக்கிறது.
■■■■■■■■■■ ■■■ ■ ■■■■■■■
🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅
Naina = eyes