காதலின் துடிப்பு

நான் கண் இமைக்காமல்
உன்னையே
பார்த்து கொண்டு நிற்கிறேன்
உன் மௌனம்
எப்போது கலையுமென்று ...!!

எனது காதுகளும் ஆவலோடு
காத்து கொண்டு இருக்கு
உனது குரலின்
இனிமையை கேட்பதற்கு...!!

எனது இதயமும் துடித்து
கொண்டே இருக்கு
உன் இதய துடிப்பை
என் இதயத்துடன்
இணைப்பதற்கு ...!!

இவையெல்லாம் நான்
உன் மீது வைத்து இருக்கும்
காதலின் துடிப்பு
என்பதை புரிந்துகொள் ...!!

என் உடல் பொருள் ஆவி
அனைத்தும் உனக்குத்தான்
என்பதையும் உணர்ந்து கொள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Nov-21, 11:15 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kathalin thudippu
பார்வை : 126

மேலே