பறவைகள்
பறவைகள்
பறவைகள்
நம்பிக்கை வாதிகள்!
கிளைகளை நம்பி
அவை உட்காருவது
இல்லை!
தன் சிறகை
நம்பியே
கிளைகளில்
அமர்கின்றன!
எந்தப் பறவையும்
எந்த பொருளையும்
சேர்த்து வைப்பதில்லை!
எந்தப் பறவையும்
எதிர்கால கவலையில்
இன்றைய பொழுதுகளை
வீன் அடித்ததில்லை!
எந்தப் பறவையும்
இறந்த காலத்தை
எண்ணி
கண்ணீர் விட்டதில்லை!
எந்தப் பறவையும்
தன் இருப்பிடத்திற்கு
செயர்க்கை வெளிச்சம்
போட்டுக் கொண்டதில்லை!
எந்தப் பறவையும்
தன் இருப்பிடத்தை
இன்னொருவன் கொண்டு
கட்டிக் கொண்டது இல்லை!
பறவைகள்
மனிதனைவிட
உயர்வானவை!
மனிதனிடம்
இல்லாத அழகு
மயிலிடம்!
அதனால்தான்
அவளை மயிலைப்
போன்றவள் நீ
என்று மயிலிடம் மன்றாடுகிறான்!
மனிதனிடம்
இல்லாத குரலினிமை
குயிலிடம்!
அதனால்தான்
குயில்போன்ற
குரலுனக்கு என்று
கொஞ்சுகிறான்!
மனிதனிடம்
இல்லாத நடையழகு
அன்னத்திடம்!
அதனால்தான்
அன்னம் போல்
நடை அழகு உனக்கென அடையாளப்படுத்துகிறான்!
கூம்பும் பருவம் வரை
காத்திருக்க முடியுமா
உன்னால்?
கொக்கிடம்
கற்றுக்கொள்
காத்திருத்தலை!
கூரிய பார்வைக்கு
கூட்டி வருவாய்
ஆந்தையை!
சொன்னதையே
சொல்ல வேண்டுமா?
சொல்லி அழை
பச்சைக்கிளியை!
கூடி உண்ண
வேண்டுமா?
கூட்டிவா
காக்கையை!
கடின மௌன
அமைதியை
சிற்றொலியால்
அழகாக்க அழைத்து வா
சிட்டுக்குருவிகளை!
பறவைகள்
பாடசாலைகள்!
பறப்பதில் கூட
நமக்கு பாடம்
புகட்டுகிறது!
பறவைகள்
நம்பிக்கைவாதிகள்
ஓட்டு மூட்டைகளை
உடல் சூடு கொண்டே
உடைத்து உயிர்
பிரசவிக்கின்றன!
பறவைகள்
நம்பிக்கைவாதிகள்
இரு இறக்கை கொண்டே
வானத்தை
அளந்துவிடுகின்றன!
பறவைகள்
நம்பிக்கைவாதிகள்
கொக்கரக்கோ என்று
கூவியே விடியலை
எழுப்புகின்றன!
பறவைகள்
நம்பிக்கைவாதிகள்
தூது விட
நம்பிக்கைவாதியாகிறது
புறாக்கள்!
வேகமாக
உதவ விஷ்ணுவுக்கு
நம்பிக்கைவாதிகிறது
கருடன்!
மூவுலகை
சுற்றிவர
முருகனுக்கு நம்பிக்கைவாதியாகிறது மயில்!
கர்ம பயனை
கவர்ந்திழுக்கும்
காலனுக்கு நம்பிக்கைவாதியாகிறது காகம்!
கடவுளுளர்க்கும்
நம்பிக்கைவாதிகள்
பறவைகள் தான்!
உணவுக்கு
பறவைகள்...
கோழி, காடை!
உறவுக்கு
பறவைகள்.....
காகம், புறா,
பறவைகள்
இயற்கை
விவசாயிகள்
அவை தான் எச்சங்களால் விதைக்கின்றன!
பறவைகள்
சமநிலைவாதிகள்
பூச்சிகளை உண்டு
உயிர் சமநிலையை
செய்கின்றன!
எந்தப் பறவையும்
வேறொருவர்
மொழியை
வலிந்து
கற்பதில்லை!
எந்தப் பறவையும்
செயற்கைப்
பொருட்களால்
தன்னை அழகுபடுத்திக்
கொள்வதில்லை!
எந்தப் பறவையும்
மனிதனின்
வாழ்விடங்களை
அழித்தது இல்லை!
மனிதன் மட்டும் தான்
பறவைகளின்
வாழ்விடங்களை
அழித்து
தன்வாழிடம் ஆக்கிக்கொள்கிறான்!
மாடப்புறாக்களுக்கு
மசூதியும், மாதாகோவில்,
கோபுரமும் ஒன்றேதான்...
மனிதா
உனக்கு?
மதவெறியால்
வேறு வேறாய்....
ஆதலால் நீ
மண்ணில் நடக்கிறாய்...
பறவைகள்
உன்னை விட
உயரத்தில் பறக்கின்றன....
பறவைகளை
போற்று....
மண்ணின் மாண்பை
உயர்த்து...
நம்பிக்கைவாதிகளை
பார்த்து....
நாளும் நீ
பாடம் கற்று...
ஏற்று
நம்பிக்கையெனும் கீற்று.....