புங்கமர வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதக் கடுப்பு மகாமூர்ச்சை தாபசுரம்
வாதகுன்மம் ரத்தத்தால் வந்திடுநோய் - ஓதுகின்ற
புண்புரையும் வல்விஷமும் போகுந் திரண்டுருண்டே
பண்புறுபுங் கம்வேர்க்குப் பார்
- பதார்த்த குண சிந்தாமணி
புங்கமர வேரானது வாதக் கடுப்பு, மகா மூர்ச்சை, தாபசுரம், வாயுகுன்மம், இரத்தத்தால் உண்டாகும் நோய்கள், இரணம், பாம்பின் விடம் ஆகியவற்றை நீக்கும்

