மின்னல் தேவதை 555
***மின்னல் தேவதை ***
என்னவளே...
வான் மின்னல் தாக்கினால்
பசுமரமும் பட்டு போகுமாம்...
உன் பார்வை மின்னல்
என்மீது தாக்கியபோது...
என் உயிருக்குள்
ஓர் உயிர் துளிர் விட்டதடி...
இந்த வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்க...
ஜோடி பறவைகளை நீ
வானத்தில் கண்டதுண்டா...
நான் ரசித்து
பார்க்கும் போதெல்லாம்...
மண்ணில் நான் எப்போது
ஜோடி சேர்வேனென்று...
ஏங்குமடி
என் உள்ளம்...
துளிர்விட்ட பூங்கோடி
நீரின்றி வாடுவதை போல...
துளிர்விட்ட
என் உயிரை...
நீயின்றி வாடா
வைத்துவிடாதே...
காதல் பறவையாக
நாமும் வானில் சிறகடிக்கலாம்...
வா காதல் உலகில்.....
***முதல் பூ .பெ .மணி .....***